News April 12, 2025
வெள்ளியங்கிரி மலையேறிய பக்தர் உயிரிழப்பு!

கோவை வெள்ளியங்கிரி மலையேறிய காஞ்சிபுரத்தை சேர்ந்த ரமேஷ் என்ற பக்தர் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். கடந்த ஆண்டு மலையேறியவர்களில் 9க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அவர்களில் பலருக்கு இதய நோய் இருந்தது தெரிந்தது. இதேபோல் இந்த ஆண்டும் உயிரிழப்பு தொடர்கிறது. எனவே, இதய நோய், மூச்சுத் திணறல் உள்ளவர்கள் முழு உடல் பரிசோதனைக்குப் பின் மலையேறுவது நல்லது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News April 19, 2025
இரட்டை இலை மேலே தாமரை மலரும்: நயினார்

தமிழக பாஜகவின் புதிய தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள நயினார் நாகேந்திரன் சேலத்தில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, அதிமுக கூட்டணி தொடர்பான கருத்துக்களை யாரும் தெரிவிக்க வேண்டாம் எனவும் தலைமையின் அறிவுறுத்தலின்படி நடந்து கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார். வரும் தேர்தலில், இரட்டை இலை மேலே தாமரை மலரும் என்று அவர் உறுதிபடக் கூறினார்.
News April 19, 2025
புதுச்சேரி CM வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

புதுச்சேரி CM ரங்கசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இ-மெயில் மூலம் மிரட்டல் வந்ததையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். மோப்ப நாய் உதவியுடன் ரங்கசாமியின் வீடு முழுவதும் சோதனையிட்டனர். இறுதியில் அது புரளி என தெரியவந்ததையடுத்து போலீஸார் நிம்மதியடைந்தனர். இ-மெயிலில் மிரட்டல் விடுத்த நபர் குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.
News April 19, 2025
ஹிந்தியில் பெயர் ஏன்? NCERT விளக்கம்

இந்தியாவின் கலாசாரம், அறிவியல் பாரம்பரியத்தை வெளிப்படுத்தவே ஹிந்தி உள்ளிட்ட இந்திய மொழிகளில் பாடப்புத்தகங்களுக்கு பெயரிடப்பட்டதாக NCERT விளக்கம் அளித்துள்ளது. முன்னதாக, CBSE பாடப்புத்தகங்களுக்கு மிருதங், சந்தூர், கணித மேளா, கணித பிரகாஷ், பூர்வி, கிருதி, சிதார் என பெயரிடப்பட்டது சர்ச்சையானது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனம் எழுந்த நிலையில், NCERT தற்போது விளக்கம் அளித்துள்ளது.