News April 3, 2024
கெஜ்ரிவால் வழக்கில் நாளை தீர்ப்பு

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கைதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் நாளை தீர்ப்பளிக்கவுள்ளது டெல்லி உயர்நீதிமன்றம். மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கெஜ்ரிவாலை கடந்த வாரம் கைது செய்தது அமலாக்கத்துறை. அதனை எதிர்த்து கெஜ்ரிவால் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அதனை விசாரித்த நீதிமன்றம், நாளை தீர்ப்பளிக்கவுள்ளது.
Similar News
News January 19, 2026
திமுகவை அப்படியே EPS காப்பியடிக்கிறார்: KN நேரு

திமுக கஷ்டப்பட்டுத் தயாரிக்கும் தேர்தல் அறிக்கையை, EPS நகல் எடுப்பதாக KN நேரு விமர்சித்துள்ளார். தஞ்சையில் பேசிய அவர், திமுக ₹1,000 அறிவித்தபோது, அதை எப்படி கொடுக்க முடியும் எனக் கேட்ட EPS, இப்போது ₹2,000 கொடுப்பேன் என்கிறார். எப்படி கொடுப்பீர்கள் என்றால் திறமையாக ஆட்சி செய்வோம் எனக் கூறுகிறார். ஏற்கெனவே அவர் 10 வருஷம் ஆண்டு தான் TN இப்படி இருக்கு என காட்டமாக விமர்சித்துள்ளார்.
News January 19, 2026
விஜய் படம் ரிலீஸ்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

விஜய்யின் ‘தெறி’ ரீ-ரிலீஸை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக கலைப்புலி தாணு அபிஷியலாக அறிவித்துள்ளார். முன்னதாக, ஜன.15-ல் அறிவிக்கப்பட்ட தெறி ரீ-ரிலீஸ் புதிய படங்களின் வரவால், ஜன.23-க்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் <<18893477>>திரெளபதி 2, ஹாட்ஸ்பாட் 2<<>> பட தயாரிப்பாளர்களின் கோரிக்கையை ஏற்று ரீ-ரிலீஸ் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஜன நாயகனை தொடர்ந்து தெறி படமும், தற்போது வெளியாகாததால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
News January 19, 2026
விஜய்யிடம் துருவித் துருவி கேள்விகளை கேட்ட CBI

விஜய்யிடம் 2-வது முறையாக CBI நடத்தும் விசாரணையில் பல கிடுக்குப்பிடி கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. *கூட்டநெரிசல் தொடர்பான தகவல் எப்போது கிடைத்தது? *பிரசார வாகனத்தில் இருந்து கூட்ட நெரிசலை பார்க்க முடியவில்லையா? * கரூர் – திருச்சி வரையிலான பயணத்தில், நெரிசல் சம்பவம் தொடர்பாக யார் யாரிடம் பேசி, எந்த தகவலை பெற்றீர்கள்? *போலீஸ் அதிகாரிகளின் எச்சரிக்கை மீறப்பட்டதா? உள்ளிட்ட கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.


