News April 12, 2025

ரயில்வேயில் வேலை இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

image

இந்தியன் ரயில்வேயில் காலியாக உள்ள 9,970 உதவி லோகோ பைலட் பணியிடங்களுக்கு இன்று (ஏப்ரல் 12) முதல் 11/05/2025 வரை ஆன்லைன் வழியாக இந்த <>லிங்கை<<>> கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு- குறைந்தபட்சம் 18 முதல் அதிகபடியாக 30 வயது வரை. கல்வித்தகுதி – 10ஆம் வகுப்பு, ஐடிஐ அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். பொறியியல் டிகிரி முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க

Similar News

News December 26, 2025

திருவண்ணாமலையில் தடை விதிப்பு!

image

தமிழ்நாடு முதலவர் மு.க.ஸ்டாலின் தி.மலை மாவட்டத்திற்கு வருகை தரவுள்ளதை முன்னிட்டு, பாதுகாப்பு கருதி 26.12.2025 -27.12.2025 ஆகிய தேதிகளில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் அறிவித்துள்ளார். இந்த உத்தரவு மாவட்டம் முழுவதும் அமலில் இருக்கும். அனுமதி இல்லாமல் ட்ரோன் பறக்க விடுபவர்கள் மீது காவல் துறை மூலம் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

News December 26, 2025

வரலாற்று சாதனை படைத்த திருவண்ணமலை

image

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் கார்த்திகை மாதத்தில் சேகரிக்கப்பட்ட உண்டியல் காணிக்கை ரூ. 6,04,48,154 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை இல்லாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. கார்த்திகை தீபத் திருவிழா மற்றும் லட்சக்கணக்கான பக்தர்களின் வருகை காரணமாக காணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளதாக கோயில் நிர்வாகம் நேற்று (டிச.25) தெரிவித்துள்ளது.

News December 26, 2025

தி.மலை: மூதாட்டியிடம் தங்க நகை பறிப்பு!

image

கொசப்பாளையம் பகுதியைச் சேர்ந்த ராஜேஸ்வரி (70) என்பவரை மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் சென்ற நபர், நெசல் கிராமம் அருகே அவரை இறக்கிவிடும்போது கழுத்திலிருந்த 6 கிராம் தங்கத் தாலியைப் பறித்துக்கொண்டு தப்பினார். இதுகுறித்து ஆரணி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் மர்ம நபரைத் தேடி வருகின்றனர்.

error: Content is protected !!