News April 12, 2025
அண்ணாமலை அமைச்சர், எல்.முருகன் கவர்னர்?

மத்திய அமைச்சரவையில் விரைவில் அண்ணாமலை இணைய உள்ளதாக தகவல் கசிந்துள்ளது. BJP மாநிலத் தலைவராக நயினார் தேர்வான பிறகு அண்ணாமலைக்கு PM மோடி, அமித்ஷா இருவரும் புகழாரம் சூட்டினர். அவரது சேவை தேசிய அளவில் தேவை என அமித்ஷா வெளிப்படையாகவே பதிவிட்டிருந்தார். இதனிடையே, விரைவில் மாற்றம் செய்யப்படவுள்ள மத்திய அமைச்சரவையில் அண்ணாமலையையும், 2-வது முறையாக அமைச்சராக உள்ள எல்.முருகனை கவர்னராக்கவும் திட்டம் உள்ளதாம்.
Similar News
News November 4, 2025
கோவை சம்பவம்: திமுக அரசு மீது அன்புமணி காட்டம்

திமுக ஆட்சியில் மாணவிகளுக்கு பாதுகாப்பில்லை என்பதற்கு கோவை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமையே ஒரு கொடிய சான்று என அன்புமணி விமர்சித்துள்ளார். TN-ல் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பாலியல் குற்றங்கள் அதிகரித்து இருப்பதாக அவர் குற்றஞ்சாட்டிள்ளார். இத்தகைய குற்றங்கள் அதிகரிப்புக்கு போதை பொருட்களின் கட்டுக்கடங்காத விற்பனையே காரணம் என்றும், அவற்றை திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அவர் சாடியுள்ளார்.
News November 4, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (நவ.4) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க
News November 4, 2025
TN-ல் பாஜக வெல்லாததற்கு இதுவே காரணம்: தமிழிசை

ECI நேர்மையாக நடப்பதால் தான் தமிழ்நாட்டில் பாஜகவிற்கு ஒரு இடம் கூட கிடைப்பதில்லை என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். வட இந்தியாவில் 21 மாநிலங்களில் வளர்ச்சி திட்டங்களை கொண்டுவந்ததை போல தமிழ்நாட்டிலும் பாஜக கொண்டு வரும் எனவும், பாஜக மதவாதக் கட்சி அல்ல, மனிதவாத கட்சி என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், ஒரு போலியான வாக்காளர் பதிவை திமுக நடத்தி முடித்துவிட்டதாகவும் விமர்சித்துள்ளார்.


