News April 12, 2025
நாகை அங்கன்வாடி மையத்தில் காலி பணியிடங்கள்

நாகை மாவட்டத்தில் 20 அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் 12 அங்கன்வாடி உதவியாளர்கள் பணியிடங்கள் காலி பணியிடங்களாக உள்ளன. தகுதியான விண்ணப்பதாரர்கள் வருகிற 7ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை சம்பந்தப்பட்ட குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் உரிய சான்றுகளுடன் விண்ணப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த தகவலை உடனே வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க…
Similar News
News August 19, 2025
நாகை அருகே கொடூர கொலை

வேதாரண்யத்தை அடுத்த கோவில்தாவை சேர்ந்தவர் குமார் (38). இவருக்கும் கைலவணம்பேட்டை பகுதியை சேர்ந்த இமானுவேல் என்பவருக்கும் மணல் விற்பதில் முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இருவருக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதில், இமானுவேல், வெங்கடாஜலபதி (55), கார்த்தி (31) ஆகியோர் இணைந்து குமாரை மண்வெட்டியால் வெட்டிப் படுகொலை செய்தனர். இதையடுத்து போலீசார் 3 பேரையும் கைது செய்தனர்.
News August 19, 2025
நாகையில் இரண்டாம் கட்ட உங்களுடன் ஸ்டாலின் முகாம்!

நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளுக்கு உங்களுடன் ஸ்டாலின் முகாம் இன்று(ஆக.19) நடைபெற உள்ளது. இம்முகமானது அகரகடம்பனூர், எரவாஞ்சேரி மற்றும் திருக்கண்ணங்குடி ஆகிய ஊராட்சிப் பகுதிகளுக்கு இரண்டாவது கட்டமாக அகரகடம்பனூர் கிறிஸ்துராஜா தொடக்கப் பள்ளியில் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
News August 18, 2025
நாகை: அனைத்தும் அருளும் நவநீதேஸ்வரர்

நாகை மாவட்டம் சிக்கல் கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற நவநீதேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. தேவாரப்பாடல் பெற்ற இக்கோயிலில் உள்ள மூலவரான நவநீதேஸ்வரரை வழிபட்டால், பணம் கஸ்டம், குடுமப சிக்கல், திருமண தடங்கல், தீராத நோய் என வாழ்வில் உள்ள சகல கஸ்டங்களும் நீங்கி, நினைத்து கைக்கூடும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு இதை SHARE பண்ணுங்க!