News April 12, 2025
10 மசோதாக்கள் சட்டமானதாக அரசிதழில் வெளியீடு

உச்ச நீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து 10 மசோதாக்களும் சட்டமானதாக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழக CMஐ பல்கலை வேந்தராக்கும் மசோதா உள்ளிட்ட 10 மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் தராததை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. விசாரித்த உச்ச நீதிமன்றம் தனி அதிகாரத்தை பயன்படுத்தி மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்தது. 2023 நவம்பர் 18ல் மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளித்ததாக அரசிதழில் வெளியாகியுள்ளது.
Similar News
News September 19, 2025
தனியார் பள்ளி டீச்சர்களுக்கும் நல்லாசிரியர் விருது: அமைச்சர்

அடுத்தாண்டு முதல் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கும் நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். சென்னையில் தனியார் பள்ளி விழாவில் பேசிய அவர், TN பள்ளிக் கல்வித்துறையின் அனைத்து திட்டங்களும் சிறப்பாக செயல்பட ஆசிரியர்கள்தான் முக்கிய காரணம் என்றார். மேலும், இதுவரை அரசு, அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு மட்டுமே டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்பட்டு வந்தது.
News September 19, 2025
PM மோடியின் அரசியல் வழிகாட்டி காலமானார்!

RSS மூத்த நிர்வாகி மதுபாய் குல்கர்னி(88) காலமானார். 1942-ல் RSS-ல் இணைந்த இவர், மாவட்ட- மாநில பதவிகளில் அங்கம் வகித்துள்ளார். 1985-ல் இவர் மாநில நிர்வாகியாக இருந்த போது, மாவட்ட நிர்வாகியாக RSS பணிபுரிந்து வந்த தற்போதைய PM மோடியை BJP-ல் இணையும் படி இவர்தான் அறிவுறுத்தினார் என கூறப்படுகிறது. கடந்த 2015 வரை RSS-ல் பணியாற்றி, உடல்நல குறைவால் அதன்பிறகு பொதுவாழ்வில் சற்று விலகியுள்ளார்.
News September 19, 2025
மூலிகை: மருத்துவ குணங்கள் நிறைந்த புதினாக்கீரை!

சித்த மருத்துவர்களின் அறிவுரையின்படி,
*புதினாக் கீரையை அரைத்து தொண்டையின் வெளிப்பகுதியில் பற்றுப்போட்டால் தொண்டைப் புண் ஆறிவிடும்.
*புதினாக் கீரை தண்ணீரில் 3 மணி நேரம் ஊற வைத்து, இந்த தண்ணீரைக் குடித்து வந்தால் வயிற்றுப் பொருமல் நீங்கும்.
*கைப்பிடி புதினாவுடன் கல் உப்பு கலந்து வெறும் வாணலியில் வறுத்து, சூட்டுடன் ஒரு துணியில் மூட்டையாக கட்டி பாதத்தில் ஒத்தடம் கொடுக்க எரிச்சல் குறையும். SHARE.