News April 12, 2025
லாரி மோதி தொழிலாளி பலி

புழலை சேர்ந்தவர் மணி (54) லாரி ஓட்டுனர். இவரது லாரியில் மணியும் ரங்கன் (60) என்பவரும் மளிகைப் பொருட்களை ஏற்றிக்கொண்டு நேற்று காலை புழல் வழியாக திருத்தணிக்கு சென்றனர். அப்போது மழை பெய்ததால் மளிகை பொருட்கள் நனையாமல் இருக்க ரங்கன் லாரியின் பின் பக்கத்தில் நின்று தார்ப்பாயை இழுத்து கட்டிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மற்றொரு லாரி ரங்கன் மீது மோதியதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
Similar News
News April 19, 2025
கிண்டியில் மூலிகை சோப்பு பயிற்சி

கிண்டியில் உள்ள வேளாண் பல்கலையின் தகவல் மற்றும் பயிற்சி மையத்தில் வரும் 25ம் தேதி, மூலிகை சோப்பு தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. அதில், பஞ்ச காவ்யா, ஆரஞ்சு, வாழைப்பழம் மிக்சிங், ரோஸ், சந்தனம், ஆவாரம்பூ, கற்றாழை, அதிமதுரம், பீட்ரூட் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தி மூலிகை சோப் தயாரிப்பு பயிற்சி வழங்கப்பட உள்ளது. மேலும் விபரங்களுக்கு, 044 29530048 என்ற எண்ணை அழைக்கலாம். *நண்பர்களுக்கு பகிரவும்*
News April 19, 2025
இயற்கை எழில் கொஞ்சும் தியாசபிகல் சொசைட்டி

அன்னிபெசன்ட் அம்மையாரால் 1875ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பிரம்மஞான சபையின் தலைமையகம் ‘தியாசபிகல் சொசைட்டி’ சென்னை அடையாறு பகுதியில் உள்ளது. சமத்துவத்தை போற்றும் விதமாக உருவாக்கப்பட்ட இந்த சபை, தற்போது இயற்கை எழில் கொஞ்சும் பூங்காவாகவும் விளங்குகிறது. உலகப் புகழ்பெற்ற அடையாறு ஆலமரமும் இந்த பூங்காவில் அமைந்துள்ளது. உயிர்களின் பல்லுயிர்த் தன்மைக்கு அடையாளமாகவும் இந்தப் பூங்கா திகழ்கிறது.
News April 19, 2025
பீக் ஹவரில் குடிநீர் லாரிகளுக்கு தடை

சென்னையில் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளை தவிர்க்க, ‘பீக் ஹவர்’ நேரங்களில் குடிநீர் லாரிகள் சில பகுதிகளில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. திருவொற்றியூர், மணலி, மாதவரம் உள்ளிட்ட 6 மண்டலங்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ள நிலையில், மற்ற மண்டலங்களில் மாற்று வழித்தடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. லாரிகள் GPS மூலம் கண்காணிக்கப்படும். குறிப்பாக, விதிமுறைகளை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும்.