News April 12, 2025

கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சியில் சேர அழைப்பு

image

கூட்டுறவு நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கான 2024-25 ஆம் ஆண்டு 24-வது அஞ்சல் வழி கூட்டுறவு மேலாண்மை பட்டைய பயிற்சி திருச்சி கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் வழங்கப்பட உள்ளது. இதில் பயிற்சி பெற விரும்புவோர் <>அதிகாரப்பூர்வ இணையதளத்தில்<<>> ஏப்-16 முதல் மே-6 வரை விண்ணப்பிக்கலாம் என திருச்சி மண்டல இணை பதிவாளர் ஜெயராமன் தெரிவித்துள்ளார். இதனை உங்க நண்பர்களுக்கும் SHARE செய்ங்க..

Similar News

News August 9, 2025

திருச்சியில் குடற்புழு நீக்கம் மாத்திரை வழங்கும் முகாம்

image

திருச்சி மாவட்டத்தில் தேசிய குடற்புழு நீக்கம் மாத்திரை வழங்கும் முகாம் வரும் 11-ம் தேதி நடைபெற உள்ளது. மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து சுகாதார மையங்களிலும் நடைபெறும் இம்முகாமில் குழந்தைகள், இளம் பருவத்தினர் மற்றும் 20 முதல் 30 வயதுடைய கருவுறாத பெண்களுக்கு மாத்திரை வழங்கப்பட உள்ளது. இதில் பொதுமக்கள் கலந்து கொள்ள வேண்டும் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

News August 9, 2025

திருச்சி: புலனாய்வு துறையில் வேலை; நாளை கடைசி நாள்

image

மத்திய அரசின் புலனாய்வுத் துறையில் (Intelligence Bureau) காலியாக உள்ள ‘3,717 உதவி புலனாய்வு அதிகாரி’ பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் <>இங்கே க்ளிக்<<>> செய்து இதற்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.44,900 முதல் ரூ.1,42,400 வரை வழங்கப்படும். இந்நிலையில் இதற்கு விண்ணப்பிக்க நாளையே (ஆக.10) கடைசி நாளாகும். இதனை வேலை தேடும் நபர்களுக்கு ஷேர் பண்ணுங்க !

News August 9, 2025

திருச்சியில் தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம்

image

திருச்சி மாவட்டத்தில் தொழிற்பழகுநர் (அப்ரண்டிஸ்) சேர்க்கை முகாம் வரும் ஆகஸ்ட் 11-ஆம் தேதி காலை 10 மணி அளவில், திருச்சி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெற உள்ளது. இதில் ஐ.டி.ஐ முடித்துவிட்டு இதுவரை தொழிற்பயிற்சி பெறாதவர்கள் கலந்து கொள்ளலாம். இதுதொடர்பான மேலும் விபரங்களுக்கு 0431-2553314 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!