News April 12, 2025

பைக் வீலில் மின்சார வயர் சிக்கி மின்சாரம் தாக்கி பலி

image

திசையன்விளை அருகே இடையன்குடி யாதவர் வடக்கு தெருவை சேர்ந்தவர் வெண்ணிமலை (48). லோடு தொழிலாளி. இவர் நேற்று (ஏப்.11) காலை தோட்டத்திற்கு வாழைத் தார் வெட்டுவதற்கு சென்றுள்ளார். பைக்கில் சாலையில் சென்று கொண்டிருந்த போது அறுந்து கிடந்த மின் கம்பி மீது அவர் சென்றுள்ளார்.பைக்கின் சக்கரத்தில் மின்கம்பி சிக்கி, மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர் .

Similar News

News November 6, 2025

நெல்லை: ம.சு பல்கலையில் வினாத்தாள் மாறியதால் குழப்பம்

image

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட 60 மையங்களில் இன்று பி.காம் 3ம் ஆண்டு மேனேஜ்மென்ட் அக்கவுண்ட் அரியர் தேர்வு நடைபெற்றது. இந்த வினாத்தாளுக்கு பதில் ரீடைல் மேனேஜ்மென்ட் என்ற வினாத்தாள் தவறுதலாக மாற்றி வழங்கப்பட்டது. இதனால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டு உடனடியாக சரியான வினாத்தாள் வழங்கப்பட்டு கூடுதல் அவகாசம் வழங்கி தேர்வு நடத்தப்பட்டது.

News November 6, 2025

JUST IN: நெல்லையில் தோற்றால் பதவி பறிப்பு – ஸ்டாலின் அதிரடி!

image

நெல்லையில் உடன்பிறப்பே வா நடைபெற்ற நிகழ்வில் நெல்லை, தென்காசி மாவட்ட திமுக நிர்வாகிகளை மு.க.ஸ்டாலின் சந்தித்தார். அப்போது நெல்லையில் தோற்றால் பதவி பறிக்கப்படும் என மாவட்ட திமுக நிர்வாகிகளுக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை. நெல்லையில் நயினார் நாகேந்திரன் மறுபடியும் போட்டியிட வாய்ப்புள்ளது. எனவே நெல்லையில் தோற்றால் பதவி பறிக்கப்படும் என திமுக நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.

News November 6, 2025

நெல்லை: இனி RTO ஆபீஸ்க்கு அலைய வேண்டாம்.!

image

நெல்லை மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தம், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் இந்த <>லிங்கில் <<>>சென்று மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைசன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்

error: Content is protected !!