News April 12, 2025
CSK ரசிகர்களுக்கு இதை விட சோகம் வேறேதும் இல்லை..!

CSK அணி, இதுவரை இல்லாத அளவிற்கு மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. விஷயம் என்னவென்றால், எந்த ஒரு IPL சீசனிலும் CSK தொடர்ந்து 5 போட்டிகளில் தோற்றதில்லை. வரலாற்றிலேயே இதுதான் முதல் முறை. ரசிகர்களுமே இதை எப்படி எடுத்துக்கொள்வது எனத் தெரியாமல் தவித்து போய் இருக்கின்றனர். இந்த மோசமான நிலைக்கு என்ன காரணம் என நினைக்கிறீங்க?
Similar News
News November 2, 2025
மாறி மாறி வரப்போகும் வெயில், மழை!

பருவமழை, புயலால் TN-ல் தொடர் மழை இருந்தது. ஆனால், ‘Montha’ புயல் கரையை கடந்தபோது, கிழக்கு திசை காற்றை இழுத்து சென்றது. இதனால், TN-ல் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ளது. அடுத்த ஒருவாரத்திற்கு வெயிலின் தாக்கம் அதிகரித்தே காணப்படும் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். அதேநேரம், வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதால், நவ.8 வரை இரவில் மழை பெய்யலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
News November 2, 2025
நடிகை அர்ச்சனா தற்கொலையா? CLARITY

பிரபல தொகுப்பாளரும், நடிகையுமான VJ அர்ச்சனா, தனது கணவருடன் ஏற்பட்ட சண்டையால் தற்கொலை செய்து கொண்டதாக ஒருவர் யூடியூபில் வீடியோ வெளியிட்டு வதந்தி பரப்பியுள்ளார். இதை பார்த்து கடுப்பான அர்ச்சனா, அந்த வீடியோவின் ஸ்கிரீன்ஷாட்டை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். அதில், டேய்! புருஷன் கூடச் சண்டை போட்டுத் தற்கொலை… நோ சான்ஸ்! அவரை நான்தான் அடிப்பேன் என்று அர்ச்சனா பதிலடி கொடுத்துள்ளார்.
News November 2, 2025
SIR-ஆல் வாக்குரிமைக்கு அச்சுறுத்தல்: CM ஸ்டாலின்

SIR குறித்த அனைத்து கட்சி கூட்டம் CM ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது. இதில் பேசிய CM, தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளை பாதுகாக்க ஜனநாயக கடமையாற்ற அனைத்துக் கட்சி கூட்டம் நடப்பதாக தெரிவித்தார். ஏப்ரலில் தேர்தலை வைத்துகொண்டு தற்போது SIR பணிகளை செய்வது சரியானது அல்ல எனவும், இதனால் வாக்காளர்களின் வாக்குரிமைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்றும் அவர் பேசியுள்ளார்.


