News April 12, 2025
135 தலைமைக் காவலர்கள் பணியிட மாற்றம்

புதுச்சேரி காவல் துறையில் ஒரே இடத்தில் பணியாற்றும் போலீசார் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை பணியிடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி, புதுச்சேரி காவல் துறையில் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றி வரும் பெண் தலைமைக் காவலர்கள் உள்ளிட்ட 135 தலைமைக் காவலர்கள் நேற்று அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை காவல் துறை தலைமையக காவல் கண்காணிப்பாளர் சுபம் கோஷ் வெளியிட்டுள்ளார்.
Similar News
News April 14, 2025
தமிழ் புத்தாண்டில் செல்ல வேண்டிய கோயில்கள்

இந்த தமிழ் புத்தாண்டு சிறக்க புதுவையில் நீங்கள் செல்ல வேண்டிய கோயில்கள். புதுவை மணக்குள விநாயகர் கோயில், திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் கோயில், காரைக்கால் அம்மையார் கோயில், சுந்தரேஸ்வரர் கோயில், தருமபுரம் யாழ்முரிநாதர் கோயில், காரைக்கால் பார்வதீஸ்வரர் கோயில், பஞ்சனதீஸ்வரர் கோயில், வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் கோயில், வரதராஜ பெருமாள் கோயில், காரைக்கால் கைலாசநாதர் கோயில். SHARE செய்யவும்
News April 14, 2025
புதுவை மக்களுக்கு உள்துறை அமைச்சர் வாழ்த்து

புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் நேற்று வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், உலகின் மூத்த குடி என்ற பெருமை கொண்ட தமிழ் குடிமக்கள் தொன்மையிலும், பன்முகத் தன்மையிலும் ஈடு இணையில்லா பண்பாட்டுப் பெருமை கொண்டவர்கள். தமிழ் மக்கள் கொண்டாடி வரும் சித்திரை முதல் நாளாம் தமிழ் புத்தாண்டில் அனைவரது வாழ்விலும் நலமும், வளமும் பெருகிட எனது மனமார்த்த தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள், என்றார்.
News April 13, 2025
சங்கடங்கள் நீக்கும் சாரம் முருகன் கோயில்

புதுவையில் பிரசித்தி பெற்ற தலங்களில் ஒன்று சாரம் முருகன் கோயில். தமிழ் கடவுளாக கருதப்படும் முருகனை, மற்ற நாட்களில் வழிபடுவதை விட தமிழ் புத்தாண்டில் வழிபட்டால் பல நன்மைகள் உண்டாகும். முருகனை தமிழ் புத்தாண்டில் வழிபடுவதால், வாழ்வில் இதுவரை இருந்த தடைகள் நீங்கி, முன்னேற்றத்திற்கு வழிவகுக்குமாம். சங்கடங்கள் நீங்கி, மன நிம்மதி, சகல ஐஸ்வர்யங்களும் நிச்சயம் கிட்டுமாம். இதை SHARE பண்ணுங்க.