News April 12, 2025

விக்கிரவாண்டியில் நாய் கடித்து 7 ஆடுகள் பலி

image

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சேர்ந்தவர் ரஹீம், 56; ஆடு வியாபாரி. இவர் மேலக்கொந்தை ரோட்டில் வி.ஜி.ஆர்., நகரில் பட்டியில் ஆடுகளை அடைத்து வளர்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று மதியம் அப்பகுதியில் சுற்றி திரிந்த நாய் திடீரென பட்டியில் புகுந்து ஆடுகளை கடித்து குதறியது. இதில் இரண்டு பெரிய ஆடுகள் உட்பட 7 ஆடுகள் இறந்தன. இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Similar News

News July 4, 2025

காய்கறிகள் விதைத்தொகுப்பு வழங்கல்

image

கோலியனூர் தெற்கு ஒன்றியம், அத்தியூர் திருவாதியில் வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பாக நடைபெற்ற 2025-2026ஆம் ஆண்டிற்கான ஊட்டச்சத்து வேளாண்மை இயக்க திட்டத்தை விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளரும், விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் இரா.இலட்சுமணன் துவக்கி வைத்து காய்கறிகள் விதைத்தொகுப்பு, பழச்செடிகள் தொகுப்புகளை விவசாயிகளுக்கு வழங்கினார்.

News July 4, 2025

விழுப்புரம் மக்களே போலீஸ் அடித்தால் என்ன செய்யலாம்

image

அஜித்குமார் என்ற வாலிபர் போலீசாரின் கண்மூடித்தனமான தாக்குதலால் உயிரிழந்த சம்பவம் மாநிலத்தையே உலுக்கியது. இதுபோன்று போலீசார் விதி மீறி நடந்து கொண்டால், மனித உரிமைகள் ஆணையத்தில் இந்த <>லிங்க்<<>> மூலம் அல்லது (044‑2495 1495) தொடர்பு கொண்டு புகார் செய்யலாம். மாவட்ட எஸ்.பி-யிடமும் (04146-223555) , மாவட்ட மாஜிஸ்திரேட்டிடமும் புகார் செய்யலாம்.* நண்பர்களுக்கும் பகிர்ந்து தெரியப்படுத்துங்கள்* <<16937702>>தொடர்ச்சி<<>>

News July 4, 2025

புகார் அளிக்க வழிமுறைகள்

image

காவல்துறையினர் நியாயமற்ற சோதனை, பறிமுதல், தாக்குதல், வாய்வழி துன்புறுத்தல் அல்லது தொல்லை, சட்ட விரோத கைது அல்லது தடுப்புக்காவல், முறையான நடைமுறைகளை பின்பற்றத் தவறுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டால் மனித உரிமைகள் ஆணையம்/காவல் கண்காணிப்பாளர்/ மஜிஸ்திரேட்டிடம் புகார் அளிக்கலாம். புகார் செய்யும் போது சாட்சி கணக்குகள், மருத்துவ பதிவுகள் (காயமடைந்திருந்தால்), வீடியோ பதிவுகள் (இருந்தால்)
புகைப்படங்கள் தேவை.

error: Content is protected !!