News April 12, 2025

விருதுநகரில் இலவச நீட் பயிற்சி

image

கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளியில் +2 படித்த 110 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு இலவச நீட் மற்றும் கியூட் நுழைவு பயிற்சி ஏப்.30 வரை நடைபெறுகிறது. இப்பயிற்சியில் சிறந்த ஆசிரியர்கள் மூலம் மாணவர்களுக்கு தேர்வு குறித்து முழு பயிற்சி அளிக்கப்படும் என மாவட்டம் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News April 14, 2025

ரயிலில் 120 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்

image

மதுரையில் இருந்து குருவாயூர் செல்லும் ரயிலில் தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி விற்பனை தொடர்பாக ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே காவல் நிலைய சார்பு ஆய்வாளர் துரைசாமி தலைமையிலான ரயில்வே போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கழிவறை அருகே 4 பிளாஸ்டிக் சாக்கு பைகளில் இருந்த 120 கிலோ ரேசன் அரிசியை பறிமுதல் செய்து,ரயிலில் கொண்டு வந்தவர்கள் குறித்து ரயில்வே போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News April 14, 2025

சிவகாசியில் ரூ.25,000 ஊதியத்தில் வேலை

image

சிவகாசியில் செயல்படும் தனியார் அலுமினிய தொழிற்சாலையில் மெஷின் ஆபரேட்டர் பணிக்கு 25 காலி பணியிடங்கள் உள்ளன. இதில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 – 40 வயதிற்குட்பட்ட ஆண்கள் விண்ணப்பிக்கலாம். இதில் ஊதியமாக ரூ.15,000 – 25,000 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்புவர்கள் இங்கே <>கிளிக்<<>> செய்து ஏப்.30 க்குள் விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்களது நண்பர்களுக்கு ஷேர் செய்யவும் .

News April 13, 2025

விருதுநகர் மாவட்டத்தில் மின்தடையா? கால் பண்ணுங்க!

image

மழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் பொதுவாக மின்சாரம் துண்டிக்கப்படும். அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே ‘9498794987’ என்ற பிரத்யேக சேவை எண்ணை TNEB அறிவித்துள்ளது. இதன்மூலம் பயனாளர்கள் தமிழ்நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். SHARE!

error: Content is protected !!