News April 3, 2024

“மேடை நாகரிகமே நம் பண்பாடு”

image

தேர்தல் பரப்புரையில் மறைந்த தலைவர்களை பழிப்பது ஏற்றத்தக்கதல்ல என கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார். இது குறித்து X தளத்தில், ஜப்பானில் நிலநடுக்கம், இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு ஏற்படுவதைப் போல, தேர்தல் பரப்புரை மேடைகளில் தலைவர்களை இழிவாக பேசுவது வழக்கமாக நடப்பதுதான். ஆனால், மறைந்த தலைவர்களை பழிப்பது முறையல்ல. சிலர் ரசிப்பர், பலர் வெறுப்பர். மேடை நாகரிகமே தமிழர் பண்பாடு எனத் தெரிவித்துள்ளார்.

Similar News

News November 10, 2025

இந்த செடிகள் உங்கள் உயிரை காக்கும்..

image

காற்று மாசை பார்த்து நீங்கள் பயப்படுவது சரியே. ஏனென்றால் உலகளவில் ஆண்டுக்கு 7 மில்லியன் மக்கள் இதனால் இறக்கின்றனர். அத்துடன் 10-ல் 9 பேருக்கு சுவாச பிரச்னைகளும் ஏற்படுகிறது. இதிலிருந்து தப்பிக்க சிலர் காஸ்ட்லியான Air Purifier-களை வாங்கி வைக்கிறார்கள். இதற்கு பதிலாக வீட்டுக்குள் சில செடிகளை வளர்க்கலாம். அவை என்னென்ன என்பதை தெரிந்துகொள்ள போட்டோக்களை SWIPE பண்ணுங்க. பலரது உயிரை காக்கும் SHARE THIS.

News November 10, 2025

துரைமுருகன் அரசியலுக்கு பிள்ளையார் சுழி போட்ட தயாளு

image

கருணாநிதி எவ்வளவோ கூறியும் 1971 தேர்தலில் தான் போட்டியிட மறுத்ததாக துரைமுருகன் கூறியுள்ளார். அதன்பின், தன்னிடம் தயாளு அம்மாள், ஏன் சீட் வேண்டாம் என மறுக்கிறாய்; தேர்தல் செலவை பற்றி நீ கவலைப்பட வேண்டாம்; முதலில் நீ தேர்தலில் நில் எனக் கூறியதோடு, ₹10,000 கொடுத்தார். தான் அரசியலில் இவ்வளவு உச்சத்தில் இருக்க பிள்ளையார் சுழிபோட்டது ஸ்டாலின் தாயார் தயாளுதான் என்று துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

News November 10, 2025

சற்றுமுன்: நடிகை த்ரிஷா வீட்டில் பரபரப்பு

image

ஆழ்வார்பேட்டையில் உள்ள நடிகை த்ரிஷா வீட்டிற்கு 4-வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. டிஜிபி அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் வந்ததை அடுத்து, மோப்ப நாய்கள் உதவியுடன் த்ரிஷா வீட்டில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். இதனால், அப்பகுதி முழுவதும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. அண்மை காலமாக சினிமா நட்சத்திரங்களின் வீடுகளுக்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுகிறது.

error: Content is protected !!