News April 12, 2025
“தோனியை விமர்சிக்கலாம்.. அவமானப்படுத்தகூடாது”

கிரிக்கெட் ரசிகர்களுக்கு இர்பான் பதான் ஒரு வேண்டுகோள் வைத்துள்ளார். அதில் ஒரு கிரிக்கெட் வீரரின் செயல்பாடுகளை விமர்சிக்க ரசிகர்களுக்கு உரிமை உண்டு ஆனால் எல்லை மீறக்கூடாது என தெரிவித்துள்ளார். தோனி ஒரு சாம்பியன் கிரிக்கெட்டர்.. அவரது தலைமையில் இந்தியா பல கோப்பைகளை வென்றுள்ளது. தோனி குறித்து தரம் தாழ்ந்த கருத்துகளை சமூக ஊடங்களில் தவிர்ப்பது நல்லது என இர்பான் கேட்டுக்கொண்டுள்ளார்.
Similar News
News December 23, 2025
தமிழகத்தில் பொங்கல் பரிசு.. அறிவித்தார் அமைச்சர்

பொங்கல் பரிசுத் தொகுப்பு அறிவிப்பு எப்போது வெளியாகும் என எதிர்பார்த்து மக்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில், ஜன.6-ம் தேதிக்குள் பொங்கல் பரிசாக ரேஷன் கடைகளில் இலவச வேட்டி, சேலைகள் விநியோகம் செய்யப்படும் என அமைச்சர் காந்தி தெரிவித்துள்ளார். ரொக்கத் தொகையுடன் பச்சரிசி, வெல்லம், கரும்பு உள்ளிட்ட பொங்கல் தொகுப்பு வழங்கும் அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News December 23, 2025
அதிக நேரம் தூங்கும் விலங்குகள்

தூக்கம் என்பது மனிதர்கள் மட்டுமின்றி விலங்குகளுக்கும் உள்ள பொதுவான நடைமுறை. ஆனால், சில விலங்குகளுக்கு தூங்குவது மட்டும்தான் வேலை என்பது தெரியுமா உங்களுக்கு? அந்த விலங்குகள் நாளொன்றுக்கு எவ்வளவு மணி நேரம் தூங்கும் என்று தெரிந்தால், உங்களுக்கு தலையே சுற்றிவிடும். ஒருநாளில் அதிக நேரம் தூங்கும் விலங்குகளை, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.
News December 23, 2025
ம.பி., கேரளாவில் 66.82 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்

ம.பி.,யில் SIR பணிகளுக்கு பின் வெளியாகியுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் 42.74 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இதில் 31.25 லட்சம் வாக்காளர்கள் வேறு இடத்துக்கு மாறியுள்ளதாக ECI தெரிவித்துள்ளது. இதேபோல் கேரளாவில் 24.08 லட்சம் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். SIR பணிகளுக்கு பிறகு இதுவரை TN-ல் அதிகபட்சமாக 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


