News April 12, 2025
நயினார் நாகேந்திரனுக்கு ஜான்பாண்டியன் வாழ்த்து

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் புதிய மாநில தலைவராகத் தேர்வாகியுள்ள சகோதரர் நயினார் நாகேந்திரனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் திமுகவின் மக்கள் விரோத ஆட்சியை அகற்ற முழு வீச்சுடன் செயல்பட மீண்டும் ஒருமுறை எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என தமமுக தலைவர் ஜான் பாண்டியன் வாழ்த்து தெரிவித்தார்.
Similar News
News November 4, 2025
தாமிரபரணி ஆற்றில் பல கோடி மதிப்பிலான சிலை

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகே உள்ள சக்தி குளம் கிராமத்தில் தாமிரபரணி ஆற்றில் நேற்று அப்பகுதியை சேர்ந்த சிலர் குளித்த போது ஆற்றில் 3 ஐம்பொன் சிலைகள் கிடந்ததை பார்த்து அவற்றை ஆற்றில் இருந்து வெளியே எடுத்து உடனடியாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினருக்கு கொடுத்த தகவல் கொடுத்தனர். அவற்றை கைப்பற்றிய காவல்துறையினர் இதுக்குறித்து விரிவான விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
News November 4, 2025
நெல்லை: 12th PASS – ஆ? ரூ.71,900 சம்பளத்தில் வேலை ரெடி!

தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர் பணிக்கு (Health Inspector Grade-II) 1429 காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 12ம் வகுப்பு முடித்து 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.19,500 – ரூ.71,900 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்கே<
News November 4, 2025
நெல்லையில் 2 பேர் மீது குண்டர்

சிங்கிகுளம் தெற்கு தெருவை சேர்ந்த வானுமாமலையை கொலை முயற்சி, வழிப்பறி வழக்குகளில் களக்காடு போலீசாரும், வீரநல்லூர் கிளாக்குளம் மாதா கோவில் தெருவை சேர்ந்த இசக்கிமுத்து என்ற கட்ட இசக்கியை (42) கொலை முயற்சி மிரட்டல் வழக்குகளிலும் வீரவநல்லூர் போலீசாரும் கைது செய்தனர். போலீசார் வானுமாமாலை, இசக்கிமுத்துவை ஆட்சியரின் உத்தரவின் படி நேற்று குண்டர் சட்டத்தில் கைது செய்து பாளை மத்திய சிறையில் அடைத்தனர்.


