News April 11, 2025
பாஜகவுக்கு ஆட்சியில் பங்கு

அமித் ஷாவின் கூட்டணி அறிவிப்பு, தமிழக அரசியல் களத்தில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. ஆட்சியிலும் பாஜக பங்கு வகிக்கும் என்று அவர் கூறியதே இதற்கு காரணம். இதை குறிப்பிட்டு, கடந்த காலத்தில், பாஜகவுக்கு ஆட்சியில் பங்கு கொடுத்த மாநிலக் கட்சிகளின் நிலை என்ன ஆனது தெரியுமா எனக் கேள்வி எழுப்பும் அரசியல் நோக்கர்கள், சிவசேனா, பிஜுஜனதாதளம் உள்ளிட்டவற்றை உதாரணமாக காட்டுகின்றனர். இதுபற்றி உங்கள் கருத்து என்ன?
Similar News
News October 22, 2025
பிரசாந்த் கிஷோர் கட்சிக்கு பாஜக அழுத்தம்

பாஜகவின் அழுத்தத்தால் 3 வேட்பாளர்கள் வாபஸ் பெற்றதாக ஜன் சுராஜ் கட்சி தலைவர் பிரசாந்த் கிஷோர் குற்றம்சாட்டியுள்ளார். தேர்தலில் தோல்வி பயம் வந்துவிட்டதால், எதிர்க்கட்சி வேட்பாளர்களை பாஜக மிரட்டி வருவதாகவும், வேட்பாளர்களுக்கு தேர்தல் கமிஷன் பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். பிஹார் தேர்தலில் பிரசாந்த் கிஷோரின் கட்சி 243 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது.
News October 22, 2025
கூகுளுக்கு புது தலைவலி: களமிறங்கிய புது பிரவுசர்

ஏஐ துறையில் பெரும் புரட்சி செய்து வரும் Open AI, ChatGPT Atlas என்ற புதிய பிரவுசரை அறிமுகம் செய்துள்ளது. இது AI உடன் இணைந்து வருவதால் பயனர்களுக்கு முற்றிலுமாக புதிய அனுபவத்தை தரும் என Open AI நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏற்கெனவே மற்றொரு AI நிறுவனமான பெர்ப்ளெக்சிட்டி ‘காமெட்’ என்ற பிரவுசரை களமிறக்கியுள்ளது. ஒரே சமயத்தில் 2 புதிய புரவுசர்கள் வந்துள்ளது கூகுள் குரோமுக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது.
News October 22, 2025
மகளிர் உலகக்கோப்பையில் தெ.ஆப்பிரிக்கா புதிய சாதனை

நேற்றைய லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்திய தெ.ஆப்பிரிக்கா புதிய சாதனை ஒன்றையும் படைத்துள்ளது. WWC-ல் ஒரு இன்னிங்சில் அதிக சிக்சர்களை(11) விளாசி அந்த அணி அசத்தியுள்ளது. ஏற்கெனவே இதே தெ.ஆப்பிரிக்கா அணி, 2017-ல் 10 சிக்சர்களை அடித்திருந்தது. அவர்களே தங்களது சாதனையை 8 ஆண்டுகள் கழித்து தகர்த்துள்ளனர். 2-வது இடத்தில் 9 சிக்சர்களுடன் நியூசிலாந்து உள்ளது.