News April 11, 2025
கூட்டணி குறித்து நெல்லை முபாரக் அறிக்கை

அதிமுக-பாஜக கூட்டணி குறித்து எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் இன்று (ஏப்ரல் 11) அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், கூடா நட்பு கேடாய் முடியும் என கூறி பாஜக உடன் கூட்டணி அமைத்ததற்கு அதிமுக எத்தனை காரணங்களை கூறினாலும் அவற்றை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள், தமிழக மக்கள் நிராகரிப்பார்கள் என தெரிவித்துள்ளார்.
Similar News
News August 22, 2025
நெல்லை: காவல்துறை சிசிடிவி கேமராவை திருடி விற்ற சம்பவம்

பாப்பாக்குடி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் குற்ற சம்பவங்களை கண்காணிக்கும் வகையில் முக்கிய இடங்களில் சிசிடிவி கேமிராக்கள் காவல்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 18ம் தேதி இரவு போலீசார் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது காசி தர்மம் பகுதியில் உள்ள சிசிடிவி கேமிராக்கள் சேதமடைந்தும், ஒரு கேமிரா காணாமல் போயிருந்தது, விசாரணை நடத்தி அதே பகுதியில் உள்ள 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
News August 22, 2025
நெல்லையில் முக்கிய ரயில்கள் சேவை மூன்று மாதம் நீடிப்பு

திருநெல்வேலி – மேட்டுப்பாளையம் மற்றும் திருச்சிராப்பள்ளி – தாம்பரம் இடையேயான வாராந்திர சிறப்பு ரயில் சேவைகள் அடுத்த மூன்று மாதங்களுக்கு, அதாவது நவம்பர் 2025 வரை நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு இந்த சிறப்பு ரயில்கள் தொடர்ந்து இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
News August 22, 2025
தேசிய பெண் குழந்தை விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

நெல்லை மாவட்ட கலெக்டர் சுகுமார் இன்று விடுத்துள்ள செய்தி குறிப்பில்: பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கவும் வீரதீர செயல் புரிந்து சிறப்பாக பங்காற்றும் 18 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு தேசிய பெண் குழந்தை தினமான ஜனவரி 24 மாநில அரசின் விருது ஒரு லட்சம் மற்றும் பாராட்டு பத்திரம் வழங்கப்படும் இதற்கு awards:tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து பயனடையலாம் என தெரிவித்துள்ளார்.