News April 11, 2025

தடுமாறி சமாளிக்கும் டிரம்ப்

image

சர்வதேச வர்த்தக ஒப்பந்தங்களை மீறி, கூடுதல் வரிவிதித்தார் அதிபர் டிரம்ப். இதற்கு இந்தியா உள்ளிட்ட நாடுகள் அடக்கி வாசிக்க, சீனாவோ பதிலடி தந்தது. இறுதியாக டிரம்ப் 145% வரிவிதிக்க, சீனா பதிலுக்கு 125% வரிவிதித்தது. ஒரே நேரத்தில் அனைத்து நாடுகளுடன் வர்த்தக சண்டையிட முடியாது என்பது டிரம்ப்க்கு புரிய, சீனாவுக்கு மட்டும் தான் வரி, மற்ற நாடுகளுக்கு 90 நாள்கள் தள்ளி வைக்கிறேன் என்று சொல்லி சமாளித்துள்ளார்.

Similar News

News September 16, 2025

மைக்ரோவேவ் பாப்கார்ன் சாப்பிட்டால் கேன்சர் வருமா?

image

குறைந்த கலோரி கொண்ட பார்ப்கார்னில் நார்சத்து இருப்பதாக சொல்லப்பட்டாலும் இதனால் கேன்சர் ஏற்படுமோ என்ற கேள்வி எழுந்துள்ளது. முன்னதாக, பாப்கார்ன் பைகளில் உள்ள PFCs என்ற ரசாயனங்களோடு அதை மைக்ரோவேவ்வில் வைப்பதால் கேன்சர் ஏற்படும் அபாயம் இருப்பதாக ஆய்வுகளில் தெரியவந்தது. ஆனால் இவை தற்போது அகற்றப்பட்டுள்ளன என்பதால் கேன்சர் ஏற்படும் அபாயம் இல்லை என நிபுணர்கள் கூறுகின்றனர். SHARE.

News September 16, 2025

TN முழுவதும் சுற்றுப்பயணம் செல்லும் நயினார்!

image

பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2026 தேர்தலில் 30-35 தொகுதிகளில் வெல்ல வியூகம் வகுக்கப்பட்டுள்ளதாகவும், அதற்காக முதற்கட்டமாக 8 இடங்களில் மண்டல அளவில் பூத் கமிட்டி மாநாடுகள் நடத்தப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. வரும் 21-ம் தேதி திண்டுக்கல்லில் முதல் மாநாடு நடத்தப்பட உள்ளதாகவும் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

News September 16, 2025

ஆசிய கோப்பை: இன்று AFG Vs BAN

image

ஆசிய கோப்பையில் இன்று குரூப் B-ல் இடம்பெற்றுள்ள ஆப்கானிஸ்தான் – வங்கதேச அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ள நிலையில், சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேற இன்றைய போட்டியில் வெற்றி பெறுவது அவசியமாகும். போட்டியில் வங்கதேச அணி தோற்றால் குரூப் B-ல் இருந்து சூப்பர் 4 சுற்றுக்கு இலங்கை, ஆப்கானிஸ்தான் முன்னேறும். Head to Head = 12 போட்டிகள், வெற்றி = 7 AFG, 5 BAN.

error: Content is protected !!