News April 11, 2025
ஜிப்லி புகைப்படங்களை பதிவிட வேண்டாம் என எஸ்பி வேண்டுகோள்

சமூக வலைதளங்களில் ஜிப்லி புகைப்படங்கள் ட்ரெண்டிங் ஆகி பயன்பாட்டாளர்கள் சைபர் குற்றங்களுக்கு ஆளாகும் அபாயம் உள்ளது. இதில் அங்கீகரிக்கப்படாத ஆப்கள், இணையதளங்கள் மூலம் பதிவேற்றப்படும் புகைப்படங்கள், டீப் ஃபேக்குகளில் பயன்படுத்தப்படும் அபாயம் நேரிட அதிக வாய்ப்பு இருக்கிறது, இதுபோன்ற மோசடிகளில் பாதிக்கப்பட்டிருந்தாலோ 1930 என்ற எண்ணை அழைக்கலாம் என மாவட்ட எஸ்பி பெரோஸ்கான் அப்துல்லா தெரிவித்துள்ளார்
Similar News
News November 13, 2025
குளித்தலை அருகே வசமாக சிக்கிய இருவர் அதிரடி கைது!

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே அய்யர்மலை அரசு கலைக்கல்லூரி அருகே சட்டவிரோதமாக மது விற்பனை செய்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு சென்ற குளித்தலை போலீசார் மது விற்ற அய்யனூரைச் சேர்ந்த பரத் (21), மலையாண்டி பட்டியைச் சேர்ந்த ராமன் (20) ஆகிய இரண்டு பேர் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த அனைத்து மது பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டது.
News November 13, 2025
கரூரில் மாபெரும் தமிழ்க் கனவு” நிகழ்ச்சி

கரூர் மாவட்டம் மண்மங்கலம் ஒன்றியம் தளவாபாளையம் M.குமாரசாமி பொறியியல் கல்லூரியில் இன்று (13.11.2025) காலை 9 மணிக்கு “மாபெரும் தமிழ்க் கனவு” நிகழ்ச்சி 3ம் கட்டமாக நடைபெறுகிறது. தமிழ்நாட்டின் பாரம்பரியம் மற்றும் தொன்மையினை அடுத்த தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில் தமிழ் இணையக் கல்விக்கழகம் சார்பில் கல்லூரி மாணாக்கர்களுக்கு கலந்து கொள்கின்றனர் என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.
News November 12, 2025
வாக்கு சாவடி நிலை அலுவலர்களுக்கான ஆய்வு கூடடம்

கரூர் மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சியர் தங்கவேல் இ.ஆ.ப., தலைமையில் இன்று (12.11.2025) மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 2026க்கான கணக்கீட்டு படிவத்தினை வழங்கும் வாக்குச் சாவடி நிலை அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அரசு அதிகாரிகள் மற்றும் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.


