News April 11, 2025
24 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

இரவு 10 மணி வரை எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என IMD தெரிவித்துள்ளதை பார்க்கலாம். * இடி-மின்னலுடன் மிதமான மழை: கோவை, தேனி, தி.மலை. அரியலூர், பெரம்பலூர். *இடி-மின்னலுடன் லேசான மழை: குமரி, நெல்லை, தென்காசி, திண்டுக்கல், நீலகிரி, திருப்பூர், மதுரை, விருதுநகர், ஈரோடு, சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, கடலூர், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, கிருஷ்ணகிரி, தருமபுரி.
Similar News
News August 20, 2025
BREAKING: ரோட்டிலேயே செல்லும் விஜய்

தவெக 2-வது மாநில மாநாடு மதுரையில் நாளை நடைபெறவுள்ளது. இதற்காக பிரமாண்டமான முறையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், மாநாட்டில் பங்கேற்பதற்காக விஜய் சென்னையில் இருந்து சாலை மார்க்கமாக மதுரைக்கு புறப்பட்டுள்ளார். எப்போதும் தனி விமானத்தில் பயணிக்கும் விஜய், தற்போது சாலை வழியாக செல்வதால் வழியில் மக்களைச் சந்திக்கவும் வாய்ப்புள்ளது. இதனால் தவெக நிர்வாகிகள் அலர்ட் செய்யப்பட்டுள்ளனர்.
News August 20, 2025
ஆன்லைன் கேமிங் தடை மசோதா தாக்கலானது

பணம் வைத்து விளையாடும் ஆன்லைன் கேமிங் செயலிகளுக்கு தடை விதிக்கும் <<17454534>>புதிய மசோதா<<>> லோக் சபாவில் தாக்கலானது. இனி ஆன்லைன் பெட்டிங் கேம் சேவைகளை வழங்கினால் 3 ஆண்டு சிறை, ₹1 கோடி அபராதம்; விளம்பரம் செய்தால் 2 ஆண்டு சிறை, ₹50 லட்சம் அபராதம் விதிக்கப்படும். புதிதாக உருவாக்கப்படும் National Online gaming Commission, விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்கும். இந்த சட்டத்தை நீங்கள் வரவேற்கிறீர்களா?
News August 20, 2025
பாஜகவை தமிழக மக்கள் நம்புகின்றனர்: அண்ணாமலை

தவெக 2-வது மாநில மாநாட்டை விஜய் நன்றாக நடத்த வேண்டும் என அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். திமுகவை ஆட்சியில் இருந்து இறக்கிவிட்டு NDA கூட்டணிக்கு ஆதரவளிக்க தமிழக மக்கள் தயாராகிவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், பாஜகவின் சித்தாந்தத்தையும், கொள்கைகளையும் மக்கள் அதிகமாக நம்பத் தொடங்கிவிட்டதாக தான் நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார். அண்ணாமலையின் கருத்து உண்மையாகுமா?