News April 11, 2025
கோர்ட்டுக்கு பட்டன் போடாமல் வந்த வக்கீல்.. 6 மாதம் சிறை

கோர்ட்டுக்கு வக்கீல் அங்கி அணியாமல், சட்டை பட்டன் போடாமல் வந்தவருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து அலகாபாத் ஹைகோர்ட் லக்னோ கிளை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக வக்கீல் அசோக் பாண்டே மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. அதன்மீதான விசாரணை முடிந்ததால், 4 வாரங்களுக்குள் சரணடையும்படியும், வக்கீல் தொழிலுக்கு ஏன் தடை விதிக்கக்கூடாது என்பது குறித்தும் விளக்கம் அளிக்க ஆணையிட்டது.
Similar News
News January 11, 2026
IND Vs NZ ODI: இந்தியா பவுலிங்!

இந்தியா- நியூசிலாந்து இடையிலான முதல் ஒருநாள் போட்டி வதோதராவில் சற்று நேரத்தில் தொடங்க உள்ளது. இந்த போட்டில் டாஸ் வென்ற இந்தியா, பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. ஷுப்மன் கில் தலைமையிலான அணி, மைக்கேல் பிரேஸ்வேல் தலைமையிலான அணியை எதிர்கொள்கிறது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசி., அணி, 3 ODI & 5 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இன்றைய ஆட்டத்தில் வெற்றி யாருக்கு?
News January 11, 2026
கடையில் இஞ்சி பூண்டு பேஸ்ட் வாங்குறீங்களா? BIG DANGER!

இஞ்சி பூண்டு பேஸ்ட்டை காசை கொடுத்து கடையில் வாங்கி, உங்களுக்கு நீங்களே சூனியம் வைத்துக்கொள்கிறீர்களா? ஆம், பாக்கெட்டில் வரும் இந்த பேஸ்டுகளில், இஞ்சி பூண்டை விட எண்ணெய், உப்பு, மைதா, கெமிக்கல் அதிகமாக இருப்பதாக சமையல் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். இதனால், அஜீரணக் கோளாறு, ஃபுட் பாய்சன் என பல பிரச்னைகள் ஏற்படும் என்பதால், வீட்டிலேயே இதனை அரைத்து பயன்படுத்துங்கள் மக்களே. SHARE.
News January 11, 2026
காதலியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய கொடூரம்

புதுச்சேரி பாகூர் அருகே கஞ்சா போதையில் இருந்த சிறுவர்கள் 5 பேர், 9-ம் வகுப்பு மாணவியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம் அரங்கேறியுள்ளது. மாணவியை காதலித்த 17 வயது சிறுவன் பாகூர் அருகே அழைத்துச் சென்றுள்ளார். அங்கு ஏற்கெனவே இருந்த 4 சிறுவர்களுடன் சேர்ந்து இந்த செயலில் ஈடுபட்டது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த செயல் புதுச்சேரியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.


