News April 11, 2025
என்னது.. தாஜ்மஹால் இவரது குடும்ப சொத்தா?

தாஜ்மஹால் தனது குடும்ப சொத்து என ஹைதராபாத்தைச் சேர்ந்த யாகூப் ஹபீபுதீன் தெரிவித்து வருகிறார். தன்னை முகலாய இளவரசர் எனக் கூறிக்கொள்ளும் அவர், இந்தியாவின் கடைசி முகலாய பேரரசரான பகதூர் ஷா ஜாஃபரின் 6ஆவது தலைமுறை வாரிசு என கூறுகிறார். இதை நிரூபிக்க, ஹைதராபாத் கோர்ட்டில் தன்னுடைய DNA ரிப்போர்ட்டையும் அவர் சமர்பித்துள்ளார். மேலும், பாபர் மசூதி இருந்த இடம் தனக்கு சொந்தமானது எனவும் கூறிவருகிறார்.
Similar News
News November 6, 2025
BREAKING: SIR-க்கு எதிராக திமுக கூட்டணி ஆர்ப்பாட்டம்

வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணியை (SIR) எதிர்த்து திமுக கூட்டணி சார்பில் நவம்பர் 11-ல் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டம் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் நடத்தப்படும் என திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே SIR. பணிக்கு எதிராக தமிழக CM உள்பட, திமுக கூட்டணி தலைவர்கள் தங்கள் கண்டனத்தை தெரிவித்திருந்தனர்.
News November 6, 2025
நெய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

உங்கள் தினசரி உணவில் நெய் சேர்க்குறீங்களா? தினமும் நெய் சாப்பிடுவது நல்லது. ஆனால் அளவு முக்கியம்! 1–2 டீ ஸ்பூன் நெய் ஒரு நாளைக்கு போதும். உணவுடன் சேர்த்து எடுத்தால் மிகவும் நல்லது. நெய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? மேலே உள்ள போட்டோக்களை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து தெரிஞ்சுகோங்க. உங்களுக்கு நெய் சாப்பிட பிடிக்குமா? கமெண்ட்ல சொல்லுங்க!
News November 6, 2025
Business Roundup: அனில் அம்பானிக்கு ED சம்மன்

*இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளன *வரும் 14-ம் தேதி நேரில் ஆஜராக அனில் அம்பானிக்கு ED சம்மன் *₹4 கோடி வருமான வரித்துறை வழக்கில் நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு சாதகமான தீர்ப்பு *பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்குவது குறித்த நிர்மலா சீதாராமனின் கருத்துக்கு வங்கிகள் சங்கம் கண்டனம் *வேதாந்தா நிறுவனம் தமிழகத்தில் மின்விநியோகம் செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.


