News April 11, 2025
14 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழை

தமிழகத்தில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் பட்டியலை IMD வெளியிட்டுள்ளது. அதில், குமரி, நெல்லை, தென்காசி, தேனி, திண்டுக்கல், திருப்பூரில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளது. சேலம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், கடலூர், தி.மலை, கிருஷ்ணகிரி, தருமபுரியிலும் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.
Similar News
News December 27, 2025
அமெரிக்காவில் ஒரேநாளில் 1,800 விமானங்கள் ரத்து

அமெரிக்காவில் வழக்கத்தை விட கடும் குளிர் மற்றும் பனிப்பொழிவை மக்கள் எதிர்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நியூயார்க், சிகாகோ உள்ளிட்ட விமான நிலையங்களில் இருந்து 1,802 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும் பல விமானங்கள் தரையிறங்க முடியாமல் தவித்த நிலையில், 22,349 விமானங்கள் புறப்பாடும் தாமதமாகியுள்ளன. கடைசி நேரத்தில் விமானம் ரத்தானதால், இந்தியா வரவிருந்த பயணிகள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
News December 27, 2025
தலைநகரம் இல்லாத நாடு எது தெரியுமா?

பொதுவாக ஒருநாடு சீராக இயங்குவதற்கு தலைநகர் என்பது அவசியம். அங்குதான் நாட்டின் முக்கியமான அரசு அலுவலகங்கள் செயல்படும். ஆனால் தெற்கு பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள நவ்ரு என்ற நாட்டிற்கு தலைநகரே கிடையாது. காரணம் அந்த தீவு நாட்டின் மொத்த பரப்பரளவே 21sq km., தான். உலகின் 3-வது சிறிய நாடான நவ்ருவில் மொத்த மக்கள்தொகை 12 ஆயிரம் மட்டுமே. எனவே தான் அங்கு தலைநகர் தேவையற்றது என அந்நாட்டு அரசு கருதுகிறது.
News December 27, 2025
RSS-க்கு எதிராக விஜய் வாய் திறந்தாரா? திருமா

கிறிஸ்தவ மக்களுக்கு எதிரான சனாதனத் தாக்குதலை பற்றி விஜய் வாய் திறந்தாரா என திருமாவளவன் விமர்சித்துள்ளார். விஜய்யும் சீமானும் RSS, சனாதன சக்திகளுக்கு துணைபோகும் வகையில் செயல்படுகிறார்கள் என்பதில் சந்தேகமே இல்லை. தவெக ஒருபுறம் பெரியாரிய, திராவிட அரசியலை பேசுகிறோம் என்றும், நாதக தமிழ் தேசியம் பேசுகிறோம் என்றும் நாடகமாடுகிறார்கள். இதை TN மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என பேசினார்.


