News April 11, 2025
கடன்களுக்கான வட்டியை குறைக்கும் வங்கிகள்

வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை RBI 6% ஆகக் குறைத்ததை அடுத்து, பல வங்கிகளும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் வீடு, வாகன லோன்களுக்கான வட்டியையும் குறைக்க தொடங்கியுள்ளன. அந்த வகையில் PNB, BOI, UCO, IB வங்கிகள் வட்டியை 35 அடிப்படை புள்ளிகளும், பரோடா வங்கி சில்லரை வணிகம், சிறு குறு தொழில் கடன் மீதான வட்டியை 25 அடிப்படை புள்ளிகளும் குறைத்துள்ளன. மேலும் அறிய, உங்கள் வங்கியை நேரில் அணுகவும்.
Similar News
News August 13, 2025
வீட்டுக் கடனை அடைக்க ஈசியான வழி..!

பொதுவாக வீட்டுக் கடன் விஷயத்தில், ஆண்டுக்கு ஒரு EMI தொகையை கூடுதலாக செலுத்தி விரைவாக கடனை அடைத்து பணத்தை சேமிக்கலாம். அதைவிட சிறந்த வழி ஸ்டெப்-அப் EMI முறை. ஆண்டு வருமானம் அதிகரிப்பதற்கு ஏற்ப EMI தொகையை அதிகரிப்பதே இந்த முறையாகும். இதன்மூலம் 20 ஆண்டுகளுக்கு ₹1 கோடி வீட்டுக் கடன் பெற்றிருந்தால், அதனை 9 ஆண்டுகள் 8 மாதங்களில் அடைத்து ₹52 லட்சம் வரை வட்டியை சேமிக்க முடியும். SHARE IT.
News August 13, 2025
‘மதராஸி’ படத்தின் கதை இதுதானா?

‘மதராஸி’ படம் அடிப்படையில் காதல் கதையாம். இந்த காதலால் தமிழ்நாட்டில் பணியாற்றும் படக்குழுவிற்கும், வட இந்திய மாஃபியா கும்பலுக்கும் மோதல் ஏற்படுகிறது. இதில் தியாகங்கள், பழிவாங்கலை சேர்த்து முருகதாஸ் படமாக உருவாக்கி இருப்பதாக சொல்கிறார்கள். முன்னதாக, கஜினியும், துப்பாக்கியும் சேர்ந்ததுதான் இந்த படம் என முருகதாஸ் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. வரும் 5-ம் தேதி படம் ரிலீஸாக உள்ளது.
News August 13, 2025
இந்தியாவில் நுழைய போட்டி போடும் உலக நிறுவனங்கள்

ஸ்டார்லிங்க்கிற்கு அரசு ஒப்புதல் அளித்த நிலையில், உலகளவில் உள்ள Satcom நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்க ஆர்வம் காட்டியுள்ளன. லக்ஸம்பர்க்கின் Intelsat, பிரிட்டனின் Inmarsat, சிங்கப்பூரின் டெலிகாம், கொரியாவின் KT SAT, தாய்லாந்தின் IPSTAR, இந்தோனேஷியாவின் PT Telekomunikasi உள்ளிட்ட நிறுவனங்கள் இந்திய சந்தையை குறிவைத்துள்ளன. ஏற்கெனவே அமேசானின் Kuiper அரசு அனுமதிக்காக காத்திருக்கிறது.