News April 11, 2025

புதுச்சேரி காவலர் பயிற்சி பள்ளி காவலர் பலி

image

புதுச்சேரி மாநிலம் கோரிமேடு பகுதியில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் பிரசாந்த் என்பவர் ஹோம் கார்ட் பயிற்சி பெற்று வருகிறார். நேற்று இரவு உரிய அனுமதியின்றி காவலர் பள்ளியில் இருந்து தனது இருசக்கர வாகனத்தில் வெளியே சென்றுள்ளார். அப்போது புதுச்சேரி – விழுப்புரம் சாலை எல்லைப்பிள்ளை சாவடி பகுதியில் விபத்தில் சிக்கி சம்பவ இடத்தில் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News April 29, 2025

உதவியாளர்கள் பணிக்கான தேர்வு- விடைக்குறிப்புகள் வெளியீடு

image

புதுவை மாநில அரசுத் துறைகளில் 256 உதவியாளர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 22,860 பேர் பங்கேற்று இந்த தோ்வை எழுதினர். மொத்தம் 100 மதிப்பெண்களுக்கான தேர்வின் விடைக்குறிப்புகள் நிா்வாகச் சீா்திருத்தத் துறை <>இணையதளத்தில்<<>> நேற்று வெளியிடப்பட்டன. இதுகுறித்த அறிவிப்பை சாா்பு செயலா் ஜெய்சங்கா் நேற்று வெளியிட்டுள்ளார். இத்தகவலை உங்க நண்பர்களுக்கும் SHARE செய்ங்க.

News April 28, 2025

பாஜக பிரமுகர் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி கைது

image

புதுச்சேரியில் பாஜக பிரமுகர் உமா சங்கர் கொலை வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியான ரவுடி கருணா கைது செய்யப்பட்டுள்ளார். கடலூரில் தலைமறைவாக இருந்த கர்ணாவை வடக்கு குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். கருணா கைது செய்யப்பட்டுள்ளதால், இந்த வழக்கில் வெளிவராத பல்வேறு தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவருடன் சஞ்சய் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

News April 28, 2025

பாண்டிச்சேரியில் பாகிஸ்தான் பெண்

image

பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா பல நடவடிக்களை எடுத்து வருகிறது. இந்நிலையில் புதுவையில் லாஸ்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஹனீப்கான்(39) கடந்த 2013-ம் ஆண்டு அவரின் உறவினரான பாகிஸ்தானைச் சேர்ந்த பஷியாபானு (38) என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் பஷியா பானு விசா கெடு முடிவடைந்த நிலையில் அவர் நாட்டை விட்டு செல்லாமல் இருப்பதால் அவர் மீது லாஸ்பேட்டை போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

error: Content is protected !!