News April 11, 2025
புதுவை PRTC ஊழியர்கள் போராட்டம் வாபஸ்

பி.ஆர்.டி.சி.யில் 276 ஒப்பந்த ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள், பணி நிரந்தரம் செய்யக் கோரி நேற்று முன்தினம் முதல் வேலை நிறுத்த போராட்டத்தை துவங்கினர். நேற்று போக்குவரத்துதுறை ஆணையர் சிவக்குமாருடன் பேச்சுவார்த்தை நடத்த எம்.எல்.ஏ நேரு ஏற்பாடு செய்தார். அந்த பேச்சுவார்த்தையில் பணி நிரந்தர கோரிக்கைகயை ஒரு மாதத்திற்குள் நிறைவேற்றுவதாக போக்குவரத்து நிர்வாகம் உறுதியளித்தது. இதனால் போராட்டத்தை கைவிட்டனர்.
Similar News
News October 16, 2025
புதுவையில் போலீசார் தீவிர ரோந்து பணி

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, புதுவையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்தவகையில், தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை பகுதியில் நேற்று இரவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, கடைகளில் கூட்ட நெரிசலை தவிர்க்குமாறு அறிவுறுத்தினர். சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்களை ஒழுங்குபடுத்தினர். மேலும், பாதுகாப்புடன் பட்டாசுகள் விற்பனை செய்யப்படுகிறதா? எனவும் ஆய்வு செய்தனர்.
News October 16, 2025
புதுவை: சைபர் கிரைம் ஆய்வாளர் சஸ்பெண்ட்!

புதுச்சேரியில் கோ ப்ரீ சைக்கிள் என்ற போலி சைக்கிள் நிறுவனம் மூலம் பொதுமக்களிடம் ரூ.50 கோடிக்கு மேல் மோசடி செய்த வழக்கில், அந்நிறுவனத்தின் வழக்கறிஞர்கள் மூலம் லட்சக்கணக்கில் பணத்தை லஞ்சமாக பெற்றதற்காக, விசாரணை அதிகாரியான சைபர் கிரைம் ஆய்வாளர் கீர்த்தியை சஸ்பெண்ட் செய்து காவல்துறை தலைமையகம் உத்தரவிட்டுள்ளது. தற்பொழுது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
News October 16, 2025
புதுவை: குடியரசு துணைத் தலைவரை சந்தித்த சபாநாயகர்

புது டெல்லி சென்றுள்ள புதுச்சேரி சட்டப்பேரவை தலைவர் செல்வம், இந்திய குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது புதுச்சேரி மாநில பாஜக தலைவர் வி.பி. ராமலிங்கம் மாநில செயலாளர் ஜெயக்குமார் ரெட்டியார் ஆண்டியார் பாளையம் ராஜா ஆகியோர் உடன் இருந்தனர்.