News April 11, 2025
த்ரிஷாவை ஓரங்கட்டிய பிரியா வாரியர், சிம்ரன்

இன்று காலையில் இருந்து ட்ரெண்டிங் பிரியா வாரியர் தான். தொட்டு தொட்டு பேசும் சுல்தானா பாட்டிற்கு டான்ஸ் ஆடி ரசிகர்களை vibe ஆக்கிவிட்டார். அதே போல, கேமியோ ரோலில் வரும் சிம்ரனுக்கும், அஜித்துக்குமான கெமிஸ்ட்ரி விசில் சத்தத்தை அள்ளுகிறது. படத்தில் ஹீரோயின் த்ரிஷா தான் என்றாலும், ரசிகர்களை கவர்ந்தது என்னவோ சிம்ரனும், பிரியா வாரியரும் தான். நீங்க படம் பாத்தாச்சா.. மூணு பேரில் யாரு பெஸ்ட்?
Similar News
News November 14, 2025
காலை சாப்பிடும் முன் இதை தெரிஞ்சுக்கோங்க..

மனிதர்களுக்கு காலை உணவு என்பது இன்றியமையாதது. ஒருநாள் முழுவதும் நாம் செயல்படுவதற்கு தேவையான ஆற்றலின் மூலமாக காலை உணவு உள்ளது. அதனால் தான் அதன் பெயர் Break Fast. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த காலை உணவை எப்படி சாப்பிட வேண்டும், எதை சாப்பிடக்கூடாது, காலை உணவை தவிர்த்தால் ஏற்படும் விளைவுகள் பற்றி மேலே தொகுத்துள்ளோம். Swipe செய்து தெரிந்து கொள்ளுங்கள்.
News November 14, 2025
EPS-க்கு மன்னிப்பு கடிதம் எழுதவில்லை: வைத்திலிங்கம்

OPS ஆதரவாளர் <<18275451>>வைத்திலிங்கம்<<>>, மீண்டும் அதிமுகவில் இணைய உள்ளதாக நேற்று செய்தி வெளியானது. ஆனால், இது அடிப்படை ஆதாரமற்றது என அவர் மறுத்துள்ளார். EPS-யிடம் மன்னிப்பு கடிதம் கொடுத்து அதிமுகவில் இணைய உள்ளதாக வெளியான செய்தியில் எள்ளளவும் உண்மை இல்லை. இதுபோன்ற பொய் செய்திகள் எனக்கு வருத்தமளிக்கிறது. அதிமுகவை மீட்டெடுத்து ஆட்சியில் அமர வைப்பதுதான் எனது நோக்கம் என்றும் தெரிவித்துள்ளார்.
News November 14, 2025
MP, MLA-க்கள் வழக்குகளில் சாட்டையை சுழற்றும் கோர்ட்

MP, MLA-க்கள் மீதான வழக்குகளை விரைவாக விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்களுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளுக்கு அதிக முன்னுரிமை தர வேண்டும். விசாரணை தள்ளி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தால், அது தீவிரமாக கருதப்படும். மேலும், ஐகோர்ட் தடை உத்தரவு காரணமாக நிலுவையில் உள்ள வழக்கு விவரங்களை 2 வாரங்களில் தாக்கல் செய்யவும் ஆணையிடப்பட்டுள்ளது.


