News April 11, 2025
அமைச்சர் பொன்முடியின் கட்சி பதவி பறிப்பு

திமுக துணை பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து அமைச்சர் பொன்முடி விடுவிக்கப்பட்டுள்ளார். பாலியல் தொழிலாளி குறித்து பேசியது சர்ச்சையான நிலையில் திமுக தலைமை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. பொன்முடியின் பேச்சு ஏற்றுக்கொள்ள முடியாதது. எந்த காரணத்திற்காகப் பேசப் பட்டிருந்தாலும் இப்படிப்பட்ட கொச்சையான பேச்சுகள் கண்டிக்கத்தக்கது என கனிமொழி கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News April 19, 2025
விழுப்புரத்தில் அரசு வேலை.. கடைசி வாய்ப்பு

மாநில மற்றும் விழுப்புரம் போக்குவரத்து கழகத்தில் உள்ள 640 காலிப்பணியிடங்கள் நிறப்பட உள்ளன. அதன்படி 01.07.2025 தேதியின்படி, 24 வயது நிறைந்திருக்க வேண்டும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் எழுத பேச தெரிந்திருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் கட்டாயம். விருப்பமுள்ளவர்கள்<
News April 19, 2025
இன்று மின்தடை இல்லை விழுப்புரம் மின்வாரியம் அறிவிப்பு

விழுப்புரம் துணை மின் நிலையத்திற்குட்பட்ட ஜானகிபுரம் மின்னூட்டியில் இன்று (19.04.2025) மேற்கொள்ளப்பட விருந்த பராமரிப்பு பணிகள் நிர்வாக காரணங்களுக்காக ஒத்தி வைக்கப்படுகிறது. எனவே இன்று வழக்கம் போல் மின்னூட்டம் வழங்கப்படும் என உதவி செயற்பொறியாளர் / நகரம்/ விழுப்புரம் அலுவலகம் அறிவித்துள்ளது. அதனால் இன்று மின்தடை இல்லை, வழக்கம் போல மின்சாரம் இருக்கும். ஷேர் பண்ணுங்க
News April 19, 2025
ரூ. 6 லட்சம் மதிப்புள்ள 280 கிலோ குட்கா பறிமுதல்

திருவெண்ணெய்நல்லூர் போலீசார் நேற்று மாலை ஆனத்துாரில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பைக்கில் மூட்டையுடன் வந்த வாலிபரை நிறுத்தி சோதனை செய்த போது குட்கா இருப்பது தெரியவந்தது. விசாரணையில் பைக்கில் வந்தவர் மரக்காணம் பகுதியை சேர்ந்த மதன்குமார் என்பதும், திருவெண்ணெய்நல்லூர் அருகே தங்கி, குட்கா பொருட்களை பல பகுதிகளுக்கு சப்ளை செய்து வருவதும் தெரியவந்தது. அதனை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.