News April 11, 2025
பிரபல நடிகர் மரணத்தில் விலகிய மர்மம்!

ஹாலிவுட் நடிகர் வால் கில்மர்(64) கடந்த 7-ம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது இறப்புக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, அதிகாரப்பூர்வ மருத்துவ அறிக்கை வெளியாகியுள்ளது. அதில், நிமோனியா மற்றும் தொண்டைப் புற்றுநோயே கில்மர் மரணத்திற்கு காரணம் என கூறப்பட்டுள்ளது. நடிகர் வால் கில்மர் ‘டாப் கன்’ படத்தின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானவர் என்பது கவனிக்கத்தக்கது.
Similar News
News April 19, 2025
IPL 2025: DC முதலில் பேட்டிங்

IPL 2025-ல் அகமதாபாத்தில் நடைபெறும் மேட்ச்சில், GT அணி டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. இதுவரை இரு அணிகளும் 5 முறை மோதியுள்ளன. அவற்றில் 3-ல் DC-யும், 2-ல் GT-யும் வெற்றி பெற்றுள்ளன. இந்த போட்டியில் யார் வெற்றி பெறுவாங்க என நினைக்குறீங்க?
News April 19, 2025
₹49,000 வரை சம்பளம்.. மத்திய அரசில் 200 காலியிடங்கள்!

மத்திய அரசின் இந்தியா நிலக்கரி நிறுவனத்தில் இருக்கும் 200 டெக்னீசியன் காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளிவந்துள்ளது. இதற்கு, 18 முதல் 30 வயதுக்குட்பட்ட 10வது, ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். எழுத்துத் தேர்வு நடைபெறும். மாதம் ₹49,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு மே 10-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். முழு தகவலுக்கு <
News April 19, 2025
மதிமுகவினருக்கு துரை வைகோ எம்.பி. வேண்டுகோள்

மதிமுக முதன்மை செயலாளர் பதவியிலிருந்து விலகிய <<16147444>>துரை வைகோ<<>> எம்பி, 3 பக்க அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், 20ம் தேதி நடைபெறும் நிர்வாகக் குழு கூட்டத்தில் மட்டுமே பங்கேற்பேன், பிறகு முக்கிய கூட்டங்களில் பங்கேற்க மாட்டேன் என்றும் கூறியுள்ளார். 7 ஆண்டாக தான் மேற்கொண்ட முயற்சிகளை நிர்வாகிகள் தொடர வேண்டும், எந்த சூழலிலும் வைகோ மனம் கலங்கி விடாமல் பாதுகாக்க வேண்டுமெனவும் அவர் கேட்டுள்ளார்.