News April 11, 2025

அசர வைக்கும் ‘குட் பேட் அக்லி’ முதல் நாள் வசூல்!

image

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளிவந்து, ‘குட் பேட் அக்லி’ நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அஜித் அதகளம் செய்துள்ள படத்தை ரசிகர்களை கொண்டாடி வருகின்றனர். முதல் நாள் வசூலாக படம், சுமார் ₹28.50 கோடி வசூல் செய்திருக்கும் என தகவல் வெளிவந்து கொண்டிருக்கின்றன. படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், வரும் நாள்களில் படத்தின் வசூல் பெரிய அளவில் எகிரலாம். நீங்க படம் பாத்தாச்சா.. எப்படி இருக்கு?

Similar News

News August 19, 2025

பாஜகவின் ஸ்கெட்ச்.. பதிலுக்கு திமுக போட்ட மாஸ்டர் பிளான்

image

NDA-வின் து.ஜனாதிபதி வேட்பாளராக CPR-ஐ களமிறக்கியதற்கு பின்னால் கொங்கு வாக்காளர்களை கவரும் பாஜகவின் பிளான் இருப்பதாக கூறப்பட்டது. அதோடு, CPRஐ திமுக ஆதரிக்க தவறினால் அது அவர்களுக்கு பேக் ஃபயர் ஆகும் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில், அதே கொங்கு பெல்ட்டை சேர்ந்தவரான இஸ்ரோ மயில்சாமி அண்ணாதுரையின் பெயரை திமுக பரிந்துரைத்துள்ளதாம். திமுகவின் இந்த மாஸ்டர் பிளான் வொர்க் அவுட் ஆகுமா?

News August 19, 2025

பருத்தி மீதான இறக்குமதி வரி ரத்து

image

பருத்தி மீதான 11% இறக்குமதி வரியை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. டிரம்ப் 50% வரி விதித்ததால், தமிழக உற்பத்தியாளர்களுக்கு ஏற்படும் இழப்பை ஈடுகட்ட, பருத்தி மீதான இறக்குமதி வரியை ரத்து செய்ய வேண்டும் என பிரதமருக்கு CM ஸ்டாலின் சமீபத்தில் கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில், ஆக.19 முதல் செப்.30 வரை பருத்தி மீதான இறக்குமதி வரிக்கு விலக்கு அளித்து, மத்திய அரசு மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

News August 19, 2025

NDA கூட்டணி கட்சிகள் ஆலோசனை

image

டெல்லியில் NDA கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது. துணை ஜனாதிபதி தேர்தல், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது. NDA கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் இக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளார். அதேபோல், INDIA கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளர் குறித்து இன்று பிற்பகல் 12:30 மணிக்கு கூட்டணி கட்சிகள் ஆலோசிக்க உள்ளன.

error: Content is protected !!