News April 11, 2025

இனி தியேட்டரிலும் மது விற்பனை.. வரும் புது திட்டம்!

image

குடும்பமாக அமர்ந்து, ஒன்றாக சிரித்து மகிழ்ச்சியாக நேரத்தை கழிக்க வரும் இடமே தியேட்டர். அம்மாதிரியான பொது இடத்தில், மது விற்பனை செய்ய PVR – INOX உரிமம் கேட்டுள்ளதாம். இது பெரிய மெட்ரோ நகரங்களில் ரசிகர்களை ஈர்க்க செய்யப்போகும் ஸ்டேட்டர்ஜி என விளக்கமளிக்கின்றனர். ஆனால், வெளியில் இருந்து வாங்கிட்டு வரக்கூடாது. அவர்களே தியேட்டரில் விற்பனை செய்வார்களாம். இது குறித்து நீங்க என்ன சொல்றீங்க?

Similar News

News September 17, 2025

அஜித் படத்தை ரீமேக் செய்ய ஆசை: கவின்

image

கவின், ப்ரீத்தி அஸ்ரானி நடிப்பில் ‘கிஸ்’ படம் நாளை மறுநாள் வெளியாகவுள்ளது. இந்நிலையில், சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் விஜய், அஜித் நடித்த காதல் படங்களில் தனக்கு பிடித்ததை பகிர்ந்துள்ளார். குஷி, சச்சின், காதலுக்கு மரியாதை, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், முகவரி ஆகிய படங்கள் தனக்கு பிடிக்கும் என கூறியுள்ளார். அதேநேரம், ‘வாலி’ படத்தை ரீமேக் செய்ய ஆசை என்றும் விருப்பம் தெரிவித்துள்ளார்.

News September 17, 2025

புதிய பகைவரையும் வெல்வோம்: கனிமொழி

image

அப்பா கருணாநிதி பெற்ற பெரியார் விருதை தான் பெற வேண்டும் என்ற கனவை நனவாக்கியுள்ளார் அண்ணன் ஸ்டாலின் என்று கனிமொழி நெகிழ்ச்சிபட கூறியுள்ளார். திமுக முப்பெரும் விழாவில் பேசிய அவர், நம் பரம்பரை பகைவரோ, பாரம்பரிய பகைவரோ, புதிய பகைவரோ என விஜய்யையும் மறைமுகமாக குறிப்பிட்டு, அத்தனை பேரையும் வென்று காட்டுவோம் என்றும் சூளுரைத்துள்ளார்.

News September 17, 2025

சோம்பலை முறிக்கும் உணவுகள்

image

சோம்பல் என்பது உடல் ஆற்றல் இல்லாமல் மந்தமான நிலைக்கு செல்வது ஆகும். சோம்பல் ஏற்பட பல்வேறு காரணங்கள் இருந்தாலும், சத்தான சில உணவுகள், உடல் மற்றும் மூளைக்கு புத்துணர்வு ஊட்டி, சுறுசுறுப்பாக செயல்பட உதவும். அது என்ன உணவுகள் என்பது மேலே போட்டோக்களில் இருக்கு. அதை ஒவ்வொன்றாக பாருங்க. உடலை சுறுசுறுப்பாக்கும் உணவுகள் வேறு ஏதேனும் உங்களுக்கு தெரிந்தால் கமெண்ட்ல சொல்லுங்க.

error: Content is protected !!