News April 11, 2025

சகல சௌபாக்கியம் தரும் வெள்ளிக்கிழமை வழிபாடு!

image

வெள்ளிக்கிழமைகளில் பெருமாள் கோயிலில் உள்ள தாயாருக்கு, அபிஷேகத்திற்குத் தேவையான பசும்பாலை வழங்கினால் பண வரவு உண்டாகும் *பச்சை வளையலை தாயாருக்கு அணிவித்திட, செல்வம் பெருகும் *சுக்ர ஓரையில் மகாலட்சுமி அஷ்டோத்திரம் சொல்லி செந்தாமரை இதழ் கொண்டு அர்ச்சிக்க தனலாபம் கிடைக்கும் *மாலை வேளையில் சாம்பிராணி கொண்டு வீடு முழுக்க புகை போடுவதன் மூலம் வீட்டில் ஏதேனும் துர்சக்திகள் இருந்தால் விலகிவிடும்.

Similar News

News January 7, 2026

BREAKING: சம்பளம் கிடையாது.. அரசு அறிவிப்பு

image

‘சம வேலைக்கு சம ஊதியம்’ கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களின் சம்பளப் பணம் பிடித்தம் செய்யப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது. இதனால், No Work No Pay என்ற கொள்கையின்படி, ஜன.6-க்கு பிறகு மருத்துவ காரணங்களை தவிர்த்து, விடுப்பு எடுத்த ஆசிரியர்களின் சமபளம் பிடித்தம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 7, 2026

CUTE (UG) நுழைவுத் தேர்வுக்கு உடனே அப்ளை பண்ணுங்க!

image

மத்திய பல்கலை.,கள், அவற்றின் கீழ் இயங்கும் கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கான CUTE (UG) நுழைவுத்தேர்வுக்கான விண்ணப்பப்பதிவு தொடங்கியுள்ளது. விருப்பமுள்ளவர்கள் வரும் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். பிப்.2,3,4-ம் தேதிகளில் விண்ணப்பங்களில் திருத்தங்களை மேற்கொள்ளலாம். வரும் மே 11 முதல் 31-ம் தேதி வரை, தமிழ் உள்பட 13 மொழிகளில் இத்தேர்வுகள் நடைபெறும். மேலதிக விபரங்களுக்கு <>இங்கே<<>> கிளிக் செய்யவும்.

News January 7, 2026

மார்ச்சில் தமிழக தேர்தல் தேதி அறிவிப்பா?

image

TN-ல் SIR பணிகளை தொடர்ந்து, இறுதி வாக்காளர் பட்டியல் பிப்.7-ம் தேதி வெளியிடப்பட உள்ளது. இதையடுத்து, பிப்ரவரி மாதத்தின் 2-ம் பாதியில் ECI உயர்மட்டக்குழு TN வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இக்குழுவினர் பொதுத்தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளனர். தொடர்ந்து, மார்ச் முதல் வாரத்திலேயே தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்றும், ஏப்ரல் மாதத்தில் வாக்குப்பதிவு நடைபெறும் எனவும் கூறப்படுகிறது.

error: Content is protected !!