News April 11, 2025

திருவாருர் மாவட்ட பள்ளிகளுக்கு நாளை வேலைநாள்

image

திருவாருர் மாவட்டத்தில் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் அனைத்து வகைப் பள்ளிகளுக்கும் 26, 27.11.2024 அன்று மழைக்கால விடுமுறை விடப்பட்டது. அதனைஈடு செய்யும் விதமாக 12.04.2025 மற்றும் 19.04.2025 ஆகிய இரண்டு சனிக்கிழமைகளும் பள்ளிகள் முழு வேலை நாளாக செயல்படும் என திருவாரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.

Similar News

News November 7, 2025

திருவாரூர்: இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் இன்று மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு தெரிவித்திருந்தது. அதன் திருவாரூர் மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று (நவ.7) இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை மறக்காம ஷேர் பண்ணுங்க!

News November 7, 2025

திருவாரூர்: சுகாதார ஆய்வாளர் வேலை அறிவிப்பு

image

தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர் பணிக்கு (Health Inspector Grade-II) 1429 காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 12ம் வகுப்பு & 2 வருட சுகாதார பணியாளர் படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து வரும் நவ.16-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். அரசு வேலை தேடும் அனைவருக்கும் இதை SHARE பண்ணுங்க!

News November 7, 2025

திருவாரூர் அருகே அரசு மருத்துவமனையில் ரகளை

image

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு விமலநாதன் (23) என்ற வாலிபர் காலில் அடிப்பட்டு சிகிச்சைக்காக கடும் குடிபோதையில் வந்துள்ளார். அப்போது அங்கு பணியில் இருந்த மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களை விமலநாதன் ஆபாசமாக திட்டி ரகளையில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் ரகளையில் ஈடுபட்ட விமலநாதனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!