News April 11, 2025
பழனிக்கு வாராந்திர சிறப்பு ரயில் தொடக்கம் !

பழநி வழியே தாம்பரம் – போத்தனூர் இடையே வாரந்திர சிறப்பு ரயில் இன்று(ஏப்.11) முதல் இயக்கப்படுகிறது. இந்த ரயில் ஏப்.11 முதல் மே.2 வரை 4 வெள்ளிக்கிழமைகளில் மாலை 5 மணிக்கு தாம்பரத்தில் கிளம்பி பழனிக்கு காலை 5 மணிக்கு வந்து 7.35 க்கு போத்தனூர் சேரும். மறுமார்க்கத்தில், 4 ஞாயிற்றுகிழமைகளில் இரவு12 மணிக்கு போத்தனூரில் கிளம்பி பழனிக்கு 1.50க்கு வந்து மறுநாள் மதியம் 12.15 க்கு தாம்பரம் போய் சேரும்.
Similar News
News November 14, 2025
திண்டுக்கல்: சீட்டு கட்டி ஏமாந்தால் என்ன செய்வது?

சீட்டு நடத்துபவர்கள் ஏமாற்றினால் உடனே அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளியுங்கள். மாவட்ட ஆட்சியரிடம் ஏமாற்றப்பட்டது குறித்து மனுவாக அளிக்கலாம். சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்க வழக்கறிஞரை அணுகுவது நல்லது. புகாரில், சீட்டு கட்டிய விவரங்கள், ஏமாற்றப்பட்ட விதம், எவ்வளவு பணம் இழந்தீர்கள் போன்ற விவரங்களை தெளிவாக குறிப்பிடவும். அதற்கான ஆதாரமாக வைத்துக்கொள்ளவும். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
News November 14, 2025
திண்டுக்கல்: கேன் தண்ணீர் பயன்படுத்துபவர்கள் கவனத்திற்கு!

திண்டுக்கல் மாவட்டத்தில் கேன் தண்ணீர் தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றன. கேன் தண்ணீர் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை. குடிநீர் கேன்களில், பிளாஸ்டிக் தரம், கேன்களின் சுத்தம், உற்பத்தி மற்றும் காலாவதி தேதி, BIS மற்றும் FSSAI முத்திரைகள் ஆகியவற்றை சரிபார்க்க வேண்டும். ஒரு கேனை 30 முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கேன்களின் நிறம் மாறினால் பயன்படுத்த கூடாது. ஷேர் பண்ணுங்க.
News November 14, 2025
திண்டுக்கல்: இது உங்க PHONE-ல இருக்கா!

ஆதார் முதல் அரசின் அனைத்து சேவைகள் வழங்கும் செயலிகள் போனில் உள்ளதா? இதை பதிவிறக்கம் செய்து அரசு அலுவலகங்களுக்கு இனி அலையாதீங்க
1. UMANG – ஆதார், கேஸ் முன்பதிவு,PF
2. AIS – வருமானவரித்துறை சேவை
3.DIGILOCKER – பிறப்பு, கல்வி சான்றிதழ்கள்
4.POSTINFO – போஸ்ட் ஆபிஸ் சேவை
5.BHIM UPI – பைசா செலவில்லமால் வங்கி பரிவர்த்தனை
6.M.Parivahan – வண்டி ஆவணம், டிரைவிங் லைசன்ஸ்
இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க.


