News April 11, 2025

கோவை அருகே விபத்து: 2 பேர் பலி

image

சிறுமுகையை அடுத்த ஆலங்கொம்பு பகுதியில் நேற்று இரவு ஆட்டோ ஒன்று பெண் பயணி ஒருவரை ஏற்றிக்கொண்டு சென்றுள்ளது. அதேவேளையில் ஒரே டூவீலரில் 4 இளைஞர்கள் சென்றுள்ளனர். அசுர வேகத்தில் சென்ற டூவீலர் ஆட்டோ மீது மோதியதில், 2 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலியானதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், இருவரும் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Similar News

News December 17, 2025

ரூ.1 லட்சம் பரிசு: அறிவித்தார் கோவை கலெக்டர்

image

கோவையில் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு முன்மாதிரியான பங்களிப்பை செய்த நிறுவனங்கள், தனிநபா்கள் பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பிக்கலாம். அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் விருது பெறும் 100 தனிநபா்கள், நிறுவனங்களுக்கு தலா ரூ.1 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும். இதற்கான விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வரும் ஜனவரி.20-ம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

News December 17, 2025

கோவை: செந்தில்பாலாஜிக்கு அடுத்த ஷாக்!

image

கொங்கு மண்டலத்தில் வெற்றி பெற திமுக பல்வேறு வியூங்களை வகுத்து வருகிறது. இந்நிலையில், விளாங்குறிச்சியில் 70-க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் ராஜினாமா செய்து செந்தில்பாலாஜிக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். இக்கடிதம் வைரல் ஆகி வருகிறது. இது கோவை திமுகவினரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. சில நாள்களுக்கு முன், திமுக நிர்வாகி CM-யிடம் போனில் பதவி நீக்கம் குறித்து மன வர்த்ததுடன் பேசியது குறிப்பிடத்தக்கது.

News December 17, 2025

கோயம்புத்தூர் பெண்ணுக்கு டார்ச்சர்!

image

கோவை, கணபதியைச் சேர்ந்த 25 வயது இளம் பெண்ணுக்கு, தினமும் ஏராளமான பொருள்கள் ‘கேஷ்ஆன் டெலிவரி’ மூலம் அப்பெண்ணின் பெயருடன் ஆபாசமான வார்த்தை சித்தரிக்கப்பட்டு தொடர்ந்து வந்துள்ளது. இதில், மன உலைச்சலில் இருந்த அப்பெண், போலீசாரிடம் புகார் அளித்தார். விசாரணையில், அப்பெண்ணுடன் ஏற்கனவே வேலை பார்த்த மார்க்கெட்டிங் நிறுவன உரிமையாளரான சதீஷ்குமார் என்பது தெரிந்தது. பின் அவரை போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!