News April 11, 2025
மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் உயிரிழப்பு

அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடி வெள்ளையாபுரம் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன்(45). எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்த சீனிவாசன் உடையநாதபுரத்தில் உள்ள ஒரு வீட்டில் வேலை செய்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு மயக்கமடைந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் இவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News November 3, 2025
சிவகாசி மாணவர்களுக்கு போர்மேன் பயிற்சி

சிவகாசியில் உள்ள தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் சார்பில் பட்டாசு ஆலைகளில் பணிபுரியும் போர்மேன்களுக்கு பாதுகாப்பு விதிகள் குறித்த பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சி முடித்த போர்மேன்கள் மட்டுமே பட்டாசு ஆலைகளில் பணிபுரிய முடியும். இந்நிலையில் சிவகாசி அரசு கல்லுாரியில் பயிலும் மாணவர்களுக்கும் இன்று முதல் நவ.7 வரை பயிற்சி அளித்து போர்மேன் சான்றிதழ் வழங்கப்படுகிறது.
News November 3, 2025
விருதுநகரில் கல்லால் தாக்கி கொலை

விருதுநகர் டி.சி.கே பெரியசாமி தெருவை சேர்ந்த மாரியப்பன்(50) வாறுகாலில் சடலமாக கிடந்தார். உடலை மீட்டு போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். அதில், வாடியான் தெருவை சேர்ந்த பாலகிருஷ்ணன்(29) வளர்க்கும் நாயை மாரியப்பன் கல்லால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதை பார்த்த பாலகிருஷ்ணன், மாரியப்பனை கல்லால் தாக்கியதில் அவர் உயிரிழந்த நிலையில் உடலை வாறுகாலில் வீசிய பாலகிருஷ்ணனை போலீசார் கைது செய்தனர்.
News November 3, 2025
அருப்புக்கோட்டை CSI தேவாலயத்தில் கல்லறை திருநாள்

அருப்புக்கோட்டை நெசவாளர் காலனி மதுரை சாலையில் அமைந்துள்ள CSI இமானுவேல் தேவாலயத்தில் இன்று கிறிஸ்தவ கல்லறை திருநாள் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பக்தர்கள் அதிக அளவில் பங்கேற்று தங்கள் மறைந்த உறவினர்களின் கல்லறைகளில் மலர் மாலை அணிவித்து, மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை செய்தனர். தேவாலய பாதிரியார் சிறப்பு வழிபாடு நடத்தி ஆசீர்வாதம் வழங்கினார்.


