News April 11, 2025
இந்தியாவில் இருந்து 600 டன் ஐபோன் ஏற்றுமதி

இந்தியாவில் இருந்து USA-க்கு 600 டன் ஐ-போன்கள் (15 லட்சம் போன்கள்) ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருள்கள் மீதான வரியை USA உயர்த்தியுள்ளது. இதை தற்காலிகமாக 90 நாட்கள் டிரம்ப் நிறுத்தி வைத்துள்ளார். ஆதலால் வரி அமலுக்கு வரும் முன்பு, USA-க்கு அதிக ஐபோன்களை ஏற்றுமதி செய்யும் பணியில் ஆப்பிள் ஈடுபட்டுள்ளது.
Similar News
News January 25, 2026
விஜய் CM ஆகும் சீனை மாற்றிய இயக்குநர்

பகவதி படத்தில் CM ஆவது போல் சீன் வைத்தால் அது அப்போது ஓவர்டோஸ் ஆகிவிடுமோ என்று பயந்து, கிளைமாக்ஸை மாற்றி விட்டதாக இயக்குநர் ஏ.வெங்கடேஷ் தெரிவித்துள்ளார். மேலும், அப்படத்தின் ஷூட்டிங் சமயத்தில் ரஜினியின் பாபா படம் ரிலீசானது. அதில் ரஜினி தனது 7-வது மந்திரத்தை CM ஆவதற்கு பயன்படுத்தமாட்டார் என்றும், அதை பார்த்துவிட்டு தான் பயம் வந்துவிட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.
News January 25, 2026
இன்றைய நல்ல நேரம்

▶ஜனவரி 25, தை 11 ▶கிழமை: ஞாயிறு ▶நல்ல நேரம்: 7:30 AM – 8:30 AM & 3:30 PM – 4:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 1:30 PM – 2:30 PM ▶ராகு காலம்: 4:30 PM – 6:00 PM ▶எமகண்டம்: 12:00 PM – 1:30 PM ▶குளிகை: 3:00 PM – 4:30 PM ▶திதி: சப்தமி ▶பிறை: வளர்பிறை ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம்.
News January 25, 2026
முந்தைய நாள் வரை KAS அழைத்தார்: TTV

தான் தவெகவுடன் வருவேன் என ஒருநாளும் சொல்லவில்லை என TTV தினகரன் தெரிவித்துள்ளார். மேலும், அதிமுகவின் சீனியரான செங்கோட்டையன் அவரே முடிவெடுத்து தவெகவுக்கு போய்விட்டார் என்றும், அதிமுக – பாஜக கூட்டணியில் இணைவதற்கு முந்தைய நாள் வரை, தன்னை தவெகவில் இணையும்படி அழைத்துக் கொண்டிருந்தார் என்றும் கூறியுள்ளார். ஆனால் NDA-ல் இணைந்தபின் அழைத்தபோது, அவர் என்னிடம் பேசவே இல்லை எனறு என்றும் கூறியுள்ளார்.


