News April 10, 2025
சேலத்தில் இன்று இரவு மழைக்கு வாய்ப்பு!

சேலம் மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம், நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனிடையே கடந்த சில தினங்களாக, பல இடங்களில் பரவலாக மழையும் பெய்தது. இந்நிலையில், இன்று இரவு 10 மணி வரை மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில், மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கு ஏற்றார்போல், பொதுமக்கள் தங்கள் பயணத்தை, திட்டமிட்டுக்கொள்வது நல்லது. SHARE IT!
Similar News
News September 14, 2025
சேலம்: போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை

சேலம் மாநகர போக்குவரத்து காவல்துறையினர், பொதுமக்களுக்கான சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு செய்துள்ளனர். அதன்படி அவசர உதவிக்கு-100, ஆம்புலன்ஸ்-102, சாலை விபத்து உதவி-1073, தேசிய நெடுஞ்சாலை உதவி-1033 ஆகிய எண்களை உதவிக்கு அழைத்தால் உடனடியாக உதவிக்கு வருவார்கள் என்று காவல்துறையினர் அறிவித்துள்ளனர். மேலும் சாலை விதிகளை கடைபிடித்து விபத்தில்லா பயணம் செய்யுங்கள் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
News September 14, 2025
சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு!

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (செப்டம்பர்.14) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.
News September 14, 2025
சேலம் மாநகரில் இரவு ரோந்து பணி விவரம்!

சேலம் மாநகரில் இன்று (14.09.2025) இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இதை SHARE செய்யவும்.