News April 10, 2025
செட்டிக்குளம் ஏகாம்பரேஸ்வரர் கோயில்

செட்டிக்குளம் ஏகாம்பரஸ்வரர் கோயில் பிரசித்தி பெற்ற தலமாகும். இங்கு பங்குனி 19,20,21 தேதிகளில் சூரிய கதிர்கள் நேரடியாக ஏகாம்பரேஸ்வரர் மீது விழும். உட்பிராகத்தில் 10 தூண்கள் உள்ளன அதனை சந்தன குச்சியால் தட்டினால் 10 வகையான ஒலிகள் எழும். இத்தலத்தில் உள்ள குபேர சிற்பத்தை வணங்கினால் செல்வம் கொழிக்கும் என்று கூறப்படுகிறது. திருமண வரம், குழந்தை வரம் வேண்டுவோர் இங்கு அதிகளவில் வந்து வழிபடுகின்றனர்.
Similar News
News November 5, 2025
பெரம்பலூர்: கார் மோதி ஒருவர் பலி

பெரம்பலூர், அயன்பேரையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அசரப் அலி (58). இவர் தனது ஸ்கூட்டரில் சொந்த வேலை காரணமாக திருமாந்துறை வரை சென்றுவிட்டு, வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார். அதேநேரத்தில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த வீரண்ணன் (36) மற்றும் 4 பெண்கள் ஒரு காரில், திருவண்ணாமலைக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது, அயன்பேரையூர் பிரிவு சாலையில், அசரப் அலியின் ஸ்கூட்டர் மீது கார் மோதி, அசரப் அலி உயிரிழந்தார்.
News November 5, 2025
பெரம்பலூரில் போலி மருத்துவர் கைது!

எளம்பலூர் சாலையில் உள்ள உப்பு ஓடை பகுதியில் வசித்து வருபவர் ராஜேந்திரன் (52). இவர் போலியாக மருத்துவம் பார்ப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில், சுகாதாரத்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். இதில் அவர் அக்குபஞ்சர், நேச்சுரோபதி, ஹோமியோபதி போன்ற பட்டய படிப்பு படித்துவிட்டு, ஆங்கில மருத்துவம் பார்த்தது தெரியவந்தது. இதனை அடுத்து போலி மருத்துவர் ராஜேந்திரன் கைது செய்யப்பட்டுள்ளார்.
News November 5, 2025
பெரம்பலூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று (நவ.4) இரவு 10 மணி முதல் இன்று (நவ.5) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!


