News April 10, 2025
காவல் உதவி ஆய்வாளர் போட்டித் தேர்வு: ஏப். 16 இல் இலவச பயிற்சி

நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டத்தில் காவல் உதவி ஆய்வாளா் தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு ஏப்.16 இல் தொடங்குகிறது. இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ள மனுதாரர்கள் தங்களின் விவரத்தினை 04286-222260 என்ற தொலைபேசி வாயிலாகவோ அல்லது மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் தொடர்பு கொண்டோ முன் பதிவு செய்து பயன்பெறலாம்.
Similar News
News January 11, 2026
நாமக்கல்: 4 சக்கர வாகன இரவு ரோந்து போலீசார் விவரம்

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 6 காவல் அலுவலர்கள் இரவு நான்கு சக்கர வாகன ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அதன்படி இன்று ஜனவரி. 10 நாமக்கல்-(பாலசந்தர் – 9498169138) ,வேலூர் -(தேசிங்கராஜன் – 9442260691), ராசிபுரம் -(கோவிந்தசாமி – 9498169110), குமாரபாளையம் -(நல்லதம்பி – 9498168985) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.
News January 10, 2026
நாமக்கல்: இரவு ரோந்து போலீசார் விவரம்

நாமக்கல் மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில், இரவு நேர காவல் ரோந்து பணிக்காக காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். குற்ற செயல்களை தடுக்கவும், சட்ட ஒழுங்கை பாதுகாக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவசர நிலை ஏற்பட்டால், பொதுமக்கள் தங்களது பகுதி காவல் அதிகாரியை நேரடியாக தொடர்பு கொள்ளலாம். இன்று (ஜன.10) ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
News January 10, 2026
நாமக்கல் மாவட்டத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு

நாமக்கல் மாவட்டத்தில் இனி வரும் ஐந்து நாள்களுக்கான வானிலையில், வானம் பெரும்பாலும் மேகமூட்டத்துடன் காணப்படும். மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் லேசான மழை எதிா்பாா்க்கப்படுகிறது. பகல் வெப்பம் 87.8 டிகிரிக்கு மிகாமலும், இரவு வெப்பம் 68 டிகிரியாகவும் காணப்படும் என நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


