News April 3, 2024
பாஜகவில் இணைகிறார் தமிழ் நடிகை சுமலதா

பிரபல நடிகையும், மாண்டியா மக்களவைத் தொகுதி எம்.பி.யுமான சுமலதா, பாஜகவில் இணைவதாக அறிவித்துள்ளார். தனது ஆதரவாளர்கள் முன்னிலையில் பேசிய அவர், சுயேச்சையாக போட்டியிட்டு தன்னை வெற்றி பெறச் செய்த மாண்டியா மக்களை எப்போதும் மறக்கமாட்டேன். விரைவில் பாஜகவில் இணைகிறேன்; எப்போதும் போல உங்களின் ஆதரவு வேண்டும் எனத் தெரிவித்தார். இவர் தமிழில் முரட்டுக்காளை, கழுகு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
Similar News
News April 20, 2025
சின்னத்துரை மீதான தாக்குதல்: 2 பேரை தட்டித் தூக்கிய போலீஸ்

நாங்குநேரியில் சாதிய வன்கொடுமைக்கு ஆளான மாணவர் சின்னத்துரை மீண்டும் தாக்கப்பட்ட வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்ஸ்டகிராம் மூலம் பழகியவர்கள் சின்னத்துரையை தனியாக அழைத்து தாக்கிவிட்டு செல்போனை பறித்துச் சென்றனர். தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடிவந்த போலீஸ், சங்கரநாராயணன், சக்திவேல் ஆகியோரை கைது செய்துள்ளது. இதில், தொடர்புடைய மேலும் 3 பேரையும் போலீஸ் தேடி வருகிறது.
News April 20, 2025
இன்றைய நல்ல நேரம்

▶ஏப்ரல் 20- சித்திரை- 07 ▶கிழமை: ஞாயிறு ▶நல்ல நேரம்: 7:30 AM – 8:30 AM & 3:00 PM – 4:00 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 1:30 PM – 2:30 PM ▶ராகு காலம்: 4:30 PM – 6:00 PM ▶எமகண்டம்: 12:00 PM – 1:30 PM ▶ குளிகை: 3:00 PM – 4:30 PM ▶ திதி: சப்தமி ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம் ▶ பிறை: தேய்பிறை
News April 20, 2025
தற்காலிக போர் நிறுத்தத்தை அறிவித்தது ரஷ்யா

ஈஸ்டரை முன்னிட்டு உக்ரைன் உடனான போரை தற்காலிகமாக நிறுத்துவதாக ரஷ்யா அறிவித்துள்ளது. நாளை ( ஏப்ரல் 21 ) வரை தாக்குதல் நடத்தப்படாது என ரஷ்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யா – உக்ரைன் போரை முடிவு கொண்டுவர முடியும் என அமெரிக்கா கூறி வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைய எதிர்ப்பு தெரிவித்து 2022 பிப்ரவரி முதல் போர் நடைபெற்று வருகிறது.