News April 10, 2025
ராணிப்பேட்டை: கோடை வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்

மார்ச் மாதம் தொடக்கத்தில் இருந்தே கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அது மேலும் இன்று ஏப்ரல் 10, நாளை ஏப்ரல் 11 மேலும் 1 டிகிரி வெயில் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த தாக்கம் ராணிப்பேட்டை, வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை மாவட்டங்களில் உணர முடியும் என்று தெரிவித்துள்ளது.
Similar News
News December 24, 2025
ராணிப்பேட்டை: BIRTH CERTIFICATE கிடைக்க ஈஸி வழி!

ராணிப்பேட்டை மக்களே.. உங்களது பிறப்பு சான்றிதழ் பழையதாகிவிட்டதா? அல்லது தொலைவிட்டதா? கவலை வேண்டாம். இங்கு க்ளிக் செய்து, பிறந்த தேதி, பிறந்த இடம் உள்ளிட்ட முக்கிய விவரங்களை அந்த இணையதளத்தில் உள்ளிடுங்கள். உங்களுடைய பிறப்பு சான்றிதழை உடனே பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். அனைவருக்கும் உதவும் இந்த முக்கிய தகவலை உடனே SHARE பண்ணுங்க!
News December 24, 2025
ராணிபேட்டை: டீசல் திருடிய 2 பேர் – கையும் களவுமாக கைது!

பெரப்பேரி பஸ் நிறுத்தத்தில் தனியார் கம்பெனி பஸ்கள் நிறுத்தப்படுகின்றன. அங்கு ஒருசில பஸ்களில், டீசல் திருடுவதாக பாணாவரம் போலீசாருக்கு பஸ் டிரைவர் ஒருவர் போலீசில் புகார் கொடுத்தார். இதனையடுத்து பாணாவரம் போலீசார் ரகசிய கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட போது பஸ்ஸில் டீசல் திருடியதாக நெமிலியை சேர்ந்த ரமேஷ், மகேந்திரவாடியை சேர்ந்த பிரகாஷ் ஆகியோரை நேற்று (டிச.23) கைது செய்தனர்.
News December 24, 2025
ராணிப்பேட்டை: சமையல் செய்த மூதாட்டிக்கு ஏற்பட்ட சோகம்!

ராணிப்பேட்டை: கல்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் கோவிந்தம்மாள் (80). இவா் திங்கள்கிழமை மாலை தனது வீட்டில் சமையல் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது எதிா்பாராதவிதமாக அவரது சேலையில் தீ பட்டதில் உடலில் பரவி கோவிந்தம்மாள் பலத்த காயமடைந்தாா். தொடா்ந்து சோளிங்கா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், அங்கு உயிரிழந்தாா். இது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.


