News April 10, 2025
கடித்து குதறிய தெரு நாய்கள்: 20 பேர் காயம்

எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட தாவாந்தெரு பகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட பொதுமக்களை தெரு நாய்கள் விரட்டி விரட்டி கடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நாய் கடியால் காயமடைந்தவர்கள், ஆம்புலன்ஸ் மூலம் எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
Similar News
News April 19, 2025
பெங்களூரு-கொல்லம் இடையே சேலம் வழியாக சிறப்பு ரெயில்

எஸ்.எம்.வி.டி. பெங்களூரு-கொல்லம் சிறப்பு ரெயில் (06585) இன்று 19-ஆம் தேதி (சனிக்கிழமை) எஸ்.எம்.வி.டி. பெங்களூரு ரெயில் நிலையத்தில் இருந்து பிற்பகல் 3.50 மணிக்கு புறப்பட்டு கிருஷ்ணராஜபுரம், பங்காரு பேட்டை வழியாக 8.20 மணிக்கு சேலம் வந்தடையும். இங்கிருந்து 8.30 மணிக்கு புறப்பட்டு ஈரோடு, திருப்பூர், போத்தனூர், பாலக்காடு வழியாக மறுநாள் காலை 6.20 மணிக்கு கொல்லம் சென்றடையும்.
News April 19, 2025
சேலம் ஆட்சியரகம் எண்கள்

▶️மாவட்ட ஆட்சித் தலைவர்: 0427-2450301
▶️கூடுதல் ஆட்சியர், வளர்ச்சி முகமை, சேலம்: 7373704207
▶️மாவட்ட வருவாய் அலுவலர்: 9445000911
▶️மாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர் (பொது): 9445008148
▶️மாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர் (நிலம்): 9750080888
▶️தனித்துணை ஆட்சியர், (சமூக பாதுகாப்புத் திட்டம் – ச.பா.தி) :9443797855
SHARE பண்ணுங்க மக்களே
News April 19, 2025
சேலத்தில் இன்றைய மின் தடை பகுதிகள்

சேலம்: வீரபாண்டி, புதுப்பாளையம், பாலம்பட்டி, கோணநாயக்கனூர், ராமாபுரம், சித்தர்கோவில், ஆரியகவுண்டம்பட்டி, ரெட்டிப்பட்டி, அரியானூர், உத்தமசோழபுரம், சித்தனேரி, ஆத்துக்காடு, கிச்சிப்பாளையம், எருமாபாளையம், சீலநாயக்கன்பட்டி, ராசிநகர், காஞ்சிநகர், எஸ்.கே.நகர், எம்.கே.நகர், காந்திபுரம் காலனி, மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று(ஏப்.19) மின்சார ரத்து. அக்கம் பக்கத்தினருக்கு SHARE பண்ணுங்க.