News April 10, 2025
திமுக அரசால் விசைத்தறி தொழிலாளர்கள் பாதிப்பு: EPS

திமுக அரசால் உயர்த்தப்பட்ட வரிகள், கடும் விலைவாசி உயர்வால் விசைத்தறி தொழிலாளர்கள் பாதிப்பு அடைந்துள்ளதாக இபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளார். விசைத்தறி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால், லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தவும், விசைத்தறி உரிமையாளர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
Similar News
News December 28, 2025
குமரி: இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்

கன்னியாகுமரி மாவட்ட இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி இரவு நேரங்களில் வெளியில் பயணிக்கும் நபர்கள் ஆபத்தான சூழலில் மேலே அட்டவனையில் கொடுக்கப்பட்டுள்ள எண்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
News December 28, 2025
பாகிஸ்தானை விட்டு வெளியேறும் டாக்டர்கள்

பாகிஸ்தானியர்கள் மற்ற நாடுகளுக்குச் செல்வது அதிகரித்து வருகிறது. கடந்த 2 ஆண்டுகளில் சுமார் 5000 டாக்டர்கள், 11000 பொறியாளர்கள் மற்றும் 13000 கணக்குப்பணியாளர்கள், பயங்கரவாத நடவடிக்கைகள் காரணமாக நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இந்நிலையில், பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஆசிம் முனீர் முன்பு, அமெரிக்காவில் வெளிநாடு வாழ் மக்களை பாராட்டிய பேசியதற்கு, தற்போது SM-ல் கேலி செய்யப்பட்டு வருகிறார்.
News December 28, 2025
2 நாள்களில் முடிந்த ஆஷஸ்.. ₹60 கோடி நஷ்டமா?

ஆஷஸ் கிரிக்கெட் தொடரின் 4-வது டெஸ்ட், 2 நாள்களிலேயே முடிவடைந்தது. இதனால், ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகத்துக்கு சுமார் ₹60 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இது வணிகத்திற்கு மோசமானது மற்றும் ரசிகர்களுக்கும் விளையாட்டுக்கும் நல்லதல்ல என கூறப்படுகிறது. 4-வது டெஸ்டில் 150 ஓவர்கள் கூட வீசப்படவில்லை. 2-வது டெஸ்ட் போட்டியும் 2 நாட்களிலேயே முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.


