News April 10, 2025
புதுவை: தொகுதி மேம்பாட்டு நிதியில் மாற்றம்

புதுச்சேரியில் தொகுதி மேம்பாட்டு நிதியை எம்எல்ஏக்கள் வேகமாக செலவிடும் வகையில், பல்வேறு மாற்றங்கள் செய்ய மதிப்பீட்டு குழு பரிந்துரை செய்துள்ளது. தொகுதி மேம்பாட்டு நிதியாக, முன்பு ஒரு கோடி ஒதுக்கப்பட்டது. இதனை என். ஆர் . காங்கிரஸ்- பா. ஜ. க கூட்டணி ஆட்சியில் இரண்டு கோடியாக ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. தற்போது அதனை 3 கோடியாக உயர்த்தப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.
Similar News
News November 1, 2025
புதுச்சேரி: ஆளுநர் மாளிகையில் உதயநாள் விழா

புதுச்சேரி, தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் உதயநாள் விழா ஆளுநர் மாளிகையில் இன்று கொண்டாடப்பட்டது. துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம், சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜவேலு, ஆறுமுகம் ஆகியோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து மாநிலங்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
News November 1, 2025
புதுவை: தேசிய கொடி ஏற்றிய முதல்வர்

புதுச்சேரி பிரெஞ்சுக்காரர்களின் ஆதிக்கத்திலிருந்து நவம்பர் மாதம் விடுதலை பெற்றது. ஆகையால் பிரதி வருடம் நவம்பர் முதல் தேதி புதுவை விடுதலை நாளாக கொண்டாடப்படுகிறது. அதனை ஒட்டி இன்று (நவம்பர் 1) விடுதலை நாளை முன்னிட்டு புதுச்சேரி முதல்வர் தேசியக்கொடி ஏற்றி முப்படைகளின் அணிவகுப்பை ஏற்றுக் கொண்டார். இந்த விழாவில் புதுச்சேரியில் முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
News November 1, 2025
புதுச்சேரி: நூல் வெளியீட்டு விழா

புதுச்சேரி, ஓய்வு பெற்ற தமிழ் விரிவுரையாளர் லோகநாதன் எழுதிய நுால்களான நாட்டுபுற மக்களின் நம்பிக்கைகளும், சடங்குகளும்’ என்ற ஆய்வு நுால் மற்றும் ‘குல்லா போட்ட கத்திரிக்காய்’ என்ற குழந்தை பாடல்கள் ஆகிய இரண்டு நூல்களின் வெளியீட்டு விழா, புதுச்சேரி சட்டப்பேரவையில் நடந்தது. முதல்வர் ரங்கசாமி நூல்களை வெளியிட்டார். அதனை சபாநாயகர் செல்வம் பெற்றுக்கொண்டார்.


