News April 10, 2025
தனியார் பள்ளி ஆசிரியருக்கான வேலைவாய்ப்பு முகாம்

தூத்துக்குடியில் உள்ள ஜி.யு போப் கல்லூரியில் சிபிஎஸ்இ, மெட்ரிக் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் ஏப்.12 அன்று காலை 9 – 2.30 மணி வரை நடைபெற உள்ளது. 14 க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் பங்கேற்கும் இம்முகாமில் பி.எட் அல்லாத, முன் அனுபவம் இல்லாதவர்களும் கலந்து கொள்ளலாம். ஆர்வமுள்ளவர்கள் இங்கே <
Similar News
News April 19, 2025
பூண்டி வெள்ளிங்கிரி மலையில் தூத்துக்குடி இளைஞர் உயிரிழப்பு.

தென் கைலாயம் என்று அழைக்கப்படும் கோவைப்பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலுக்கு கடந்த பிப்.மாதம் முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இக்கோவிலுக்கு தூத்துக்குடி சமீர் நகரை சேர்ந்த இளைஞர் புவனேஸ்வரன் தனது நண்பர்களுடன் வந்துள்ளார். நேற்றிரவு கிரி மலை அருகே இறங்கும் போது கால் இடறி கீழே விழுந்துள்ளார். இதில் அவர் படுகாயமடைந்து உயிரிழந்தார். இதுகுறித்து ஆலந்துறை போலீசார் விசாரிக்கின்றனர்.
News April 19, 2025
தூத்துக்குடியில் சுற்றி பார்க்க வேண்டிய 10 இடங்கள்

▶️திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில்
▶️மணப்பாடு கடற்கரை
▶️தேரிக்காடு
▶️தூய பனிமய மாதா பேராலயம்
▶️கழுகுமலை வெட்டுவான் கோயில்
▶️வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டை
▶️வெளிமான் காப்பகம்
▶️மகாகவி சுப்பிரமணிய பாரதியார் மணி மண்டபம்
▶️மயூர தோட்டம்
▶️உப்பளம்
News April 19, 2025
காயல்பட்டினம் திரவ பிரியாணி தெரியுமா?

இஸ்லாமிய மக்கள் அதிகம் வாழும் காயல்பட்டினத்தில் பகல், இரவு வேலைகளில் கிடைக்கும் ஒரு வகை திரவ உணவு கறி கஞ்சி. இதனை திரவ பிரியாணி என்றும் அழைக்கிறார்கள். மஞ்சள் நிறத்தில் காணப்படும் இந்த கறி கஞ்சி அரிசி காய்கறி பாசிப்பயிறு இறைச்சி துண்டு, மஞ்சள் இஞ்சி போன்றவைகளால் தயாரிக்கப்படுகிறது. இந்த கறிக்கஞ்சியை ஒரு முறை சுவைத்து பார்த்தால், பின் காயல்பட்டினம் சென்றால் இதனை ருசிக்காமல் இருக்க மாட்டீர்கள்.