News April 10, 2025

சிறுமியின் நிர்வாண படம் கேட்டு டார்ச்சர் – போக்சோவில் கைது

image

திருநெல்வேலி சிறுமி ஒருவரிடம் அவரது நிர்வாண படம் கேட்ட கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர். வள்ளியூர் கல்லூரி மாணவர் ஒருவர்14 வயது நெல்லை சிறுமியை காதலிப்பதாக கூறி செல் போனில் தொடர்பில் இருந்துள்ளார். இந்நிலையில் சிறுமியிடம் அவரது நிர்வாணப் படத்தை அனுப்பக் கோரி தொடர்ந்து தொல்லை கொடுத்தாராம். இதனை அடுத்து நேற்று (ஏப்9)சேரன்மகாதேவி போலீசார் கல்லூரி மாணவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

Similar News

News January 12, 2026

நெல்லை: அமெரிக்க கரன்சி மூலம் ரூ.20 லட்சம் மோசடி

image

சென்னையில் ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தை நடத்தி வரும் ஷாகுல் ஹமீதிடம் மாரியப்பன் என்பவர் ரூ.20 லட்சம் அமெரிக்க டிஜிட்டல் கரன்சியை மாற்றி தர கேட்டுள்ளார். இதை நம்பி ஷாகுல் ஹமீது நெல்லை வந்து 21,280 அமெரிக்க டிஜிட்டல் கரன்சியை மாரியப்பன் வாலட் கணக்கிற்கு ஏற்றியுள்ளார். ஆனால் அதற்கான ரூ.20 லட்சத்தை கொடுக்காமல் மாரியப்பன் தப்பியுள்ளார். புகாரின் பேரில் பாளை போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

News January 12, 2026

நெல்லை: 100 யூனிட் இலவச மின்சாரம் – APPLY…!

image

நெல்லை மக்களே, மின் இணைப்பு மோசடிகளை தடுக்கவும், 100 யூனிட் மின்சாரம் மக்களுக்கு முறையாக கிடைக்கவும் மின் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதை அரசு கட்டாயமாக்கியுள்ளது. ஆதார் எண் இணைக்காதவர்கள் <>இங்கே க்ளிக் <<>>செய்து சர்வீஸ் எண், மொபைல் எண் மற்றும் ஆதார் எண் பதிவிட்டு இணைத்து இலவச 100 யூனிட் மின்சாரம் ரத்து செய்வதை தவிர்க்கலாம். இதை மற்றவர்கள் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க!

News January 12, 2026

நெல்லை: ரூ.12,000 வழங்க நீதிமன்றம் உத்தரவு

image

நெல்லை, மேலப்பாளையத்தை சேர்ந்தவர் பஹ்மிதா ஷக்வத். வழக்கறிஞரான இவர் அங்குள்ள ஒரு கடையில் பீட்சா வாங்கியபோது கடை விளம்பரத்துடன் கூடிய பார்சல் பாக்சுக்கு கூடுதலாக ரூ.4 வசூலிக்கப்பட்டது. இதுக்குறித்து அவர் அளித்த புகாரின் படி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் விசாரித்து சம்பந்தப்பட்ட நுகர்வோருக்கு ஒரு மாதத்திற்குள் ரூ.12,000 வழங்க உத்தரவிட்டது.

error: Content is protected !!