News April 10, 2025
தென்காசி அக்னிவீர் திட்டத்தில் ஆட்சேர்ப்பு

தென்காசி மாவட்டத்தில் 2025-26 ஆம் ஆண்டு அக்னி வீர் திட்டத்தின் கீழ் 10,12 ஆம் வகுப்பு படித்த இளைஞர்களுக்கு பொதுப்பணி, டெக்னிக்கல், கிளார்க், டிரேட்ஸ்மென் பிரிவுகளில் ஆட்சேர்ப்பு நடைபெறவுள்ளது. இதில் விண்ணப்பிக்க இன்றே (ஏப்.10) கடைசி நாள். விண்ணப்பிக்க விரும்புவர்கள் இங்கே <
Similar News
News November 7, 2025
தென்காசி: எஸ்.ஐ.ஆர் படிவத்தை நிரப்புவது எப்படி?

வாக்காளர் பட்டியலை திருத்த எஸ்.ஐ.ஆர் (SIR) படிவம் வழங்கபடுகிறது. அதில் உங்கள் புதிய புகைப்படத்தை ஒட்டி விவரங்களான பிறந்த தேதி, ஆதார், கைபேசி எண், பெற்றோர்/துணைவர் விவரங்கள் பூர்த்தி செய்ய வேண்டும். 2002 வாக்காளர் பட்டியல் விவரங்கள் பூர்த்தி செய்ய வேண்டும். இரண்டு படிவத்தில் ஒன்றை பூர்த்தி செய்து, டிச.04ம் தேதிக்குள் வாக்குச்சாவடி அலுவலரிடம் ஒப்படைக்கவும். இத அனைவருக்கும் SHARE பண்ணுங்க..!
News November 7, 2025
குற்றாலம்: டூவீலர் விபத்தில் ஒருவர் பலி

தென்காசி மாவட்டம் குற்றாலம் சாலையில் வல்லம் சிலுவை முக்கு பகுதியில் காசி மேஜர்புரம் பகுதியை சார்ந்த மணிகண்டன் என்பவர் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த பொழுது வல்லத்திலிருந்து சிலுவை முக்கு நோக்கிவந்த இருசக்கர வாகனம் மீது மோதியதாக கூறப்படுகிறது. கடுமையான வேகத்தில் சென்ற மணிகண்டன் தூக்கி வீசப்பட்டு தடுப்பு சுவரில் மோதி பரிதாபமாக பலியானார். குற்றாலம் போலீசார் விசாரணை.
News November 7, 2025
தென்காசி: வாலிபருக்கு பாலியல் தொல்லை – 2 பேர் கைது

பிரவீன் (24) என்பவரை, சமூக வலைதள செயலி மூலம் அறிமுகமான முகம்மது காதி (18) மற்றும் அவரது நண்பர்கள் உள்ளிட்ட 6 பேர் நேற்று இரவு சங்கரன்கோவிலுக்கு வரவழைத்துள்ளனர். பிரவீனுடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டபோது மோதல் முற்றியுள்ளது. இதில், முகம்மது காதி மற்றும் அவரது நண்பர்கள் பிரவீனை தாக்கி தப்ப முயன்றனர். பொதுமக்கள் முகம்மது காதி மற்றும் கதிர்வேல் (17) ஆகிய இருவரை மடக்கி பிடித்து போலீசார் கைது செய்தனர்.


