News April 10, 2025

நெல்லையில் அக்னிவீர் திட்டத்தில் ஆட்சேர்ப்பு

image

நெல்லை மாவட்டத்தில் 2025-26 ஆம் ஆண்டு அக்னி வீர் திட்டத்தின் கீழ் 10,12 ஆம் வகுப்பு படித்த இளைஞர்களுக்கு பொதுப்பணி, டெக்னிக்கல், கிளார்க், டிரேட்ஸ்மென் பிரிவுகளில் ஆட்சேர்ப்பு நடைபெறவுள்ளது. இதில் விண்ணப்பிக்க இன்றே (ஏப்.10) கடைசி நாள். விண்ணப்பிக்க விரும்புவர்கள் இங்கே <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். தேர்வாகும் அக்னி வீரர்களுக்கு மாத சம்பளமாக ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை வழங்கப்படுகிறது.

Similar News

News August 18, 2025

நெல்லை: சொத்து வாங்கும் போது இதை CHECK பண்ணுங்க…

image

1.வில்லங்க சான்றிதழ் (சொத்தின் மீது கடன் (அ) அடமானம்)
2.தாய்பத்திரம் (சொத்தின் பழைய உரிமைகள்)
3.சொத்து யாருடைய பெயரில் உள்ளது மற்றும் விற்பனை பத்திரங்கள்
4. கட்டட அனுமதி (CMDA அ DTCP வரைபடம்)
5. வரி ரசீதுகள் (சொத்து, குடிநீர், மின்சாரம்)
சொத்துக்கள் வாங்கும் போது வீணாக ஏமாறாமல் இந்த எண்களுக்கு 9498452110 / 9498452120 போன் செய்து CHECK பண்ணி வாங்குங்க… SHARE பண்ணுங்க…

News August 18, 2025

நெல்லை மக்களே ஆன்லைன் லோன் உஷார்…!

image

நமது நெல்லை மக்களே, உஷார்! வங்கியில் இருந்து பேசுவதாக வரும் அழைப்புகளை நம்பி ஏமாற வேண்டாம் என நெல்லை மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது. அதில் உங்களுடைய விவரங்கள் மற்றும் புகைப்படங்களை தவறான முறையில் பயன்படுத்தி பணம் பறிக்க வாய்ப்புள்ளது. இது போன்று பலர் ஏற்கனவே லட்சக்கணக்கில் பணத்தை இழந்துள்ளனர். புகார்களுக்கு: 1930 அழையுங்க… நம் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு SHARE செய்து உஷார்படுத்துங்க…!

News August 18, 2025

நெல்லை மாவட்ட செயலாளருக்கு எடப்பாடி பழனிச்சாமி உத்தரவு

image

சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரனின் 254வது நினைவு நாளை முன்னிட்டு வருகின்ற ஆகஸ்ட் 20ஆம் தேதி பாளையில் உள்ள ஒண்டிவீரன் சிலைக்கு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ராஜலட்சுமி, முன்னாள் எம்பி சந்திரசேகரன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார்கள். இதற்கான ஏற்பாடுகளை நெல்லை மாநகர மாவட்ட அதிமுக செயலாளர் தச்சை கணேசராஜா செய்திட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று உத்தரவிட்டுள்ளார்.

error: Content is protected !!